BSNL Broadband கட்டணம் திடீர் உயர்வு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 1 ஆகஸ்ட் 2020 12:28 IST
ஹைலைட்ஸ்
  • BSNL will start charging subscribers as per the revision from August 1
  • The new change is applicable on a Pan-India basis
  • BSNL has brought the revision for both its new and existing subscribers

அதிகபட்சமாக BSNL கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது

BSNL நெட்வொர்க்கின் பிராட்பேண்டின் சில திட்டங்களின் கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் பல்வேறு விதமான பிராட்பேண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் குறிப்பிட்ட சில மாதாந்திர பிளான்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது அனைத்து பிஎஸ்என்எல் வட்டங்களிலும் அமலுக்கு வருவதாக செய்திகள் வந்துள்ளன. 

அதன்படி, 2ஜிபி CUL மாதாந்திர பிராட்பேண்ட் பிளான் 349 ரூபாயிலிருந்து 369 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 8Mbps வேகத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 2ஜிபி டேட்டா முடிந்ததும் இணையத்தின் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும்.  பிஎஸ்என்எல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடேட் காலிங் சேவையும், பிற நெட்வொர்க்குகளுக்கு ரூ.600க்கான டாக்டைமும் வழங்கப்படுகின்றன. மேலும், இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரையில் இலவச நைட் காலிங் சேவைகளும் உள்ளன. 

இதே 2ஜிபி CUL திட்டத்தின் அடுத்த நிலையாக அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் காலிங் வசதி கொண்ட பிளானின் விலை 399 ரூபாய் ஆகும். இந்தக் கட்டணம் தற்போது 419 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அடுத்ததாக 3ஜிபி CUL திட்டத்தின் விலை 499 ரூபாயிலிருந்து 519 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் 2ஜிபி CUL இன் அத்தனை அம்சங்களும் அடங்குகிறது. ஆனால், 2ஜிபி டேட்டாவுக்குப் பதிலாக 3ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

அதிகப்பட்சமாக  4ஜிபி CUL, 5ஜிபி CUL, சூப்பர் ஸ்டார் திட்டங்களின் மாதாந்திரக் கட்டணம் 30 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. 4ஜிபி CUL பிளானின் கட்டணம் ரூ.599 இலிருந்து ரூ.629 ஆகவும், 5ஜிபி CUL பிளானின் மாதாந்திர கட்டணம் ரூ.699 இலிருந்து ரூ.729 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டார் 300 பிளானின் கட்டணம் 749 ரூபாயிலிருந்து 779 ரூபாயாகவும், 15ஜிபி CUL திட்டத்தின் விலை 999 ரூபாயிலிருந்து 1,029 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றில் சூப்பர் ஸ்டார் 300 பிளானில் வாடிக்கையாளர்களுக்கு 10 Mbps வேகத்தில் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா காலியானதும் இணையத்தின் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது.


Is Mi Notebook 14 series the best affordable laptop range for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: BSNL broadband, BSNL broadband plans, BSNL, Bharat Sanchar Nigam Limited
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  2. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
  3. Oppo-வின் அடுத்த மாஸ்டர் பிளான்! Find X10 சீரிஸில் Dimensity 9600 & 9500+ சிப்செட்? ஆப்பிள், சாம்சங்கிற்கு டஃப் கொடுக்க ரெடியாகும் Oppo
  4. ஸ்மார்ட்போன் சந்தையை அதிரவைக்க வரும் Vivo-வின் அடுத்த மாஸ்டர்பீஸ்! Vivo X300e மற்றும் X Fold 6-ன் IMEI தகவல்கள் வெளியானது
  5. சொன்னதை செய்த ஆப்பிள்! இந்திய ஊழியர்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் புதிய கல்வித் திட்டம்
  6. S25-ஐ விடுங்க.. இதோ வந்துருச்சு S26 Ultra! போஸ்டர் லீக் ஆனது! புது டிசைன்ல செம்ம மாஸா இருக்கு
  7. பட்ஜெட் கையை மீறுது! Xiaomi 15 Ultra-வோட லேட்டஸ்ட் அப்டேட்! பேட்டரில கை வச்சிட்டாங்க போலயே?
  8. மலிவு விலையில் ஒரு 'Beast' டேப்லெட்! Xiaomi Pad 8 Global லீக் வந்துருச்சு! சிப்செட் வேற லெவல்
  9. S-Pen ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Tab S12 மற்றும் புது வாட்ச் வருது! ஆப்பிளுக்கு செம்ம டஃப் கொடுக்கப்போறாங்க
  10. ஷாவ்மி ரசிகர்களே குஷியாகுங்க! 43 ஆயிரம் போன் இப்போ வெறும் 26 ஆயிரத்துக்கு கிடைக்குது! இந்த டீலை மிஸ் பண்ணிடாதீங்க
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.