அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1, ஜென்போன் லைட் L1 போன்களின் விலையை 2,000 ரூபாய் வரை குறைத்துள்ளதாக அசுஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அசுஸ், விலை குறைக்கப்பட்ட போன்கள் ஃப்ளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1, ஜென்போன் லைட் L1 போன்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இரண்டு போன்களும் பட்ஜெட் போன் பிரிவில் வெளியிடப்பட்டன. இரண்டு போன்களின் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான அமைப்புகளைப் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1, ஜென்போன் லைட் L1 போன்களின் விலை:
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1 போனின் உண்மை விலை 8,999 ரூபாயாகும். தற்போது அது 6,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.
ஜென்போன் லைட் L1 போனின் விலை 6,999 ரூபாயாகும். தற்போது 2,000 ரூபாய் கழிக்கப்பட்டு 4,999 ரூபாய்க்கு அந்த போன் விற்கப்படுகிறது.
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1 சிறப்பம்சங்கள்:
அசுஸ் ஜென்போன் மேக்ஸ் M1, டூயல் நானோ சிம் ஸ்லாட் வசதியுடன் ஆண்ட்ராய்டு ஓரியோ மென்பொருடன் இயங்கும். 5.45 இன்ச் எச்.டி ஸ்க்ரீன், 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 400 நிட்ஸ் ப்ரைட்னெஸ், 82 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ வடிவமைப்பை இந்த போன் பெற்றுள்ளது. குவாட் கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோ கோரால் பவரூட்டப்பட்டுள்ள இந்த போன் 3 ஜிபி ரேம் வசதியுடன் இயங்குகிறது.
13 மெகா பிக்சல் கொண்ட சிங்கிள் ரியர் கேமராவை இந்த போன் பெற்றுள்ளது. 8 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் இந்த போன் கொண்டிருக்கிறது.
32 ஜிபி போன் சேமிப்பு வசதி, 4000 எம்.ஏ.எச் பேட்டரி வசதி, 10W ஃபாஸ்ட் சார்ஜிங், Wi-Fi 80211 b/g/n, Bluetooth v4.0, APGPS, GPS, GLONASS இணைப்பு வசதிகள் இந்த போனில் பொருத்தப்பட்டுள்ளது.
அசுஸ் ஜென்போன் லைட் L1 சிறப்பம்சங்கள்:
ஜென்போன் லைட் L1, டூயல் சிம் ஸ்லாட், 5 மெகா பிக்சல் முன்புற கேமரா, 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்பில்ட் மெமரி, 3000 எம்.ஏ.எச் பேட்டரி வசதிகளைப் பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்