ஆசஸ் இந்த ஆண்டு தனது முதன்மை சாதனமாக Asus 6Z - aka ZenFone 6Z aka ZenFone 6 (2019)-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. OnePlus 7-ன் விருப்பங்களுக்கு எதிராக செல்ல இது நிலைநிறுத்தப்பட்டது. தனித்துவமான சுழலும் கேமரா தொகுதி ஆகும். இது போட்டியுடன் ஒப்பிடும்போது தனித்து நிற்க உதவியது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்தில் 31,999 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், கடந்த பிளிப்கார்ட் விற்பனையிலும் தள்ளுபடியுடன் கிடைத்தது. நிறுவனம் இப்போது ஸ்மார்ட்போனின் விலையை நிரந்தரமாக குறைத்து வருகிறது. Asus 6Z விலைக் குறைப்பு பெறும் ஒரே ஸ்மார்ட்போன் அல்ல. ஏனெனில் நிறுவனம் கடந்த ஆண்டின் முதன்மை நிறுவனமான Asus 5Z (aka Asus ZenFone 5Z) விலையையும் குறைத்து வருகிறது. Asus 5Z கடந்த ஆண்டு 29,999 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்டது. Asus 6Z-ன் விலையை குறைந்தபட்சம் ரூ. 4,000 வரையும், Asus 5Z குறைந்தபட்சம் ரூ. 5,000 வரையும் என Asus விலையை குறைத்து வருகிறது.
இந்தியாவில் Asus 6Z, Asus 5Z-ன் விலை (திருத்தப்பட்டவை)
Asus 6Z அறிமுகப்படுத்தப்படும் போது ரூ. 31,999-யாக விலைக்குறியை கொண்டிருந்தது. நிரந்தர ரூ. 4,000 விலை குறைப்புடன் இப்போது ரூ. 27,999-யாக விற்பனை தொடங்க உள்ளது. சுவாரஸ்யமாக, கடந்த பிளிப்கார்ட் விற்பனையின் போது தயாரிப்பு அதே விலையில் கிடைத்தது. Asus 6Z-ன் அடிப்படை மாறுபாடு ரூ. 27,999 ஆரம்பமாகும். 6 ஜிபி ரேம் / 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 34,999-க்கு பதிலாக இப்போது ரூ. 30,999 முதல் தொடங்குகிறது. top-end 8 ஜிபி ரேம் / 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 5,000 பெரிய விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. மேலும், ரூ. 34,999 விலையுடன் தொடங்கிய இந்த போனுடன் ஒப்பிடும்போது, இது ரூ. 39,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
Asus 5Z ஆரம்பத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விலைக் குறைப்பைப் பெற்றது. அடிப்படை மாறுபாட்டிற்கு 24,999 ரூபாயாக விலைக் குறைப்பை பெற்றுள்ளது. Asus 5Z ஒரு குறிப்பிட்ட கால விலைக் குறைப்பை பெற்றது. இதன் அடிப்படை மாறுபாட்டின் விலை 21,999 ரூபாய். இப்போது சமீபத்திய விலைக் குறைப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பகத்துடன் அடிப்படை மாறுபாட்டிற்கு 16,999 ரூபாயாக விலைக் குறைகிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட நடுத்தர வேரியண்டிற்கு ரூ. 6,000 விலைக் குறைப்புடன் இப்போது ரூ. 18,999 க்கு பதிலாக ரூ. 24.999 முதல் ஆரம்பமாகிறது. ஒப்பிடுகையில், Asus 5Z-ன் top-end வேரியண்டிற்கு ரூ. 7,000 விலை குறைப்பு மற்றும் ரூ. 21,999 க்கு பதிலாக ரூ. 28.999 முதல் ஆரம்பமாகிறது. Asus அடிப்படை வேரியண்டிற்கு துவக்கத்தில் 29,999 ரூபாயாக விலையிடப்பட்டது.
Asus 6Z, Asus 5Z-ன் விவரக்குறிப்புகள்:
Asus 6Z, Qualcomm Snapdragon 855 SoC-யால் இயக்கப்படுகிறது. இதில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்ட தனித்துவமான சுழலும் கேமரா தொகுதி உள்ளது. 48-megapixel முதன்மை சென்சார் மற்றும் 13-megapixel ultra-wide-angle கேமராவைக் கொண்டுள்ளது. Asus 6Z, stock Android-ல் இயங்குகிறது. 5,000mAh பேட்டரியை Asus பேக் செய்கிறது. மேலும், Quick Charge 4.0-க்கான ஆதரவை வழங்குகிறது.
Asus 5Z கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Qualcomm Snapdragon 845 SoC-யால் இயக்கப்படுகிறது. இது பல ரேம் மற்றும் சேமிப்பக வகைகளில் கிடைக்கிறது. மேலும், 12-megapixel முதன்மை சென்சார் மற்றும் 8-megapixel wide-angle கேமரா ஆகியவற்றைக் கொண்ட இரட்டை கேமரா அமைப்பை உள்ளடக்கியது. 3,300mAh பேட்டரியை 5Z பேக் செய்கிறது. மேலும், Qualcomm Quick Charge 3.0-க்கான ஆதரவைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்