Android Q இப்போது Android 10 மட்டுமே, இனிப்பு பெயர்கள் எதுவும் இல்லை!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 23 ஆகஸ்ட் 2019 15:44 IST
ஹைலைட்ஸ்
  • இப்போது வரை, ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புகளின் பெயரே வைக்கப்பட்டது
  • அண்ட்ராய்டு 10 புதிய லோகோவுடன் அறிமுகமாகவுள்ளது
  • சிறந்த பார்வைக்காக இதன் வண்ணம் பச்சை நிறத்தில் இருந்து கருப்பாக மாற்றம்

Photo Credit: Google

Android Q இப்போது Android 10 மட்டுமே, தனது புதிய ஆண்ட்ராய்ட் வெர்சன்களுக்கு இனிப்புகளின் பெயரை பெயரிடும் 10 ஆண்டு கால வரலாற்றை மாற்றி அமைத்துள்ளது கூகுள். கடந்த வியாழக்கிழமை, கூகுள் தனது அடுத்த ஆண்ட்ராய்ட் வெர்சன் ஆண்ட்ராய்ட் 10 என்று மட்டுமே அழைக்கப்படும் என அறிவித்துள்ளது. உலகளாவிய பயனர்களுக்கு இது தெளிவாகவும் தொடர்புடையதாகவும் இருக்க ஆண்ட்ராய்டு வெளியீடுகளுக்கு பெயரிடும் முறையை மாற்றுவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது. இப்போது வரை, ஒவ்வொரு வெர்சனிற்கும் அகர வரிசைப்படி சுவையான விருந்தளிப்புகள் அல்லது இனிப்பு வகைகளின் பெயரே பெயரிடப்பட்டிருந்தது.

அண்ட்ராய்ட் 10 புதிய லோகோவுடன் வெளியாகவுள்ளது. சிறந்த பார்வைக்காக இந்த லோகோவின் வண்ணம் பச்சை நிறத்தில் இருந்து கருப்பு நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய மாற்றம், ஆனால் குறிப்பாக பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு பச்சை நிறத்தைப் படிக்க கடினமாக இருந்ததால் கூகுள் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அண்ட்ராய்ட் 10-ன் இறுதி வெளியீட்டில் வரும் வாரங்களில் கூகுள் அதிகாரப்பூர்வமாக இந்த புதுப்பிக்கப்பட்ட லோகோவை வெளியிடலாம்.

ஒரு அறிக்கையில் "முதலில், நாங்கள் எங்கள் வெளியீடுகளுக்கு பெயரிடும் முறையை மாற்றியுள்ளோம். எங்கள் பொறியியல் குழு எப்போதும் ஒவ்வொரு பதிப்பிற்கும் உள்ளக குறியீடு பெயர்களை சுவையான விருந்தளிப்புகள் அல்லது இனிப்புகளை அடிப்படையாகக் கொண்டு அகர வரிசைப்படி பயன்படுத்திக்கொண்டிருந்தது" என்று ஆண்ட்ராய்டின் தயாரிப்பு நிர்வாகத்தின் துணைத் தலைவர் சமீர் சமத் கூறினார். 

ஆண்ட்ராய்ட் லாலிபாப் அல்லது மார்ஷ்மெல்லோ போன்ற பெயரிடும் வழக்கம் ஒவ்வொரு ஆண்டும் வெளியீட்டின் ஒரு வேடிக்கையான பகுதியாக மாறிவிட்டது.

"உலகளாவிய இயக்க முறைமையாக, இந்த பெயர்கள் உலகில் உள்ள அனைவருக்கும் தெளிவானவை மற்றும் தொடர்புபடுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஆகவே, இந்த அடுத்த ஆண்ட்ராய்ட் வெளியீடு பதிப்பு எண்ணைப் பயன்படுத்தி அண்ட்ராய்ட் 10 என அழைக்கப்படும்" என்று சமத் விளக்கினார்.

"பல கவர்ச்சியான 'Q' இனிப்புகள் இருந்தபோதிலும், இந்த மாற்றத்திற்கான நேரம் இது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று அவர் கூறினார்.

​​இந்த ஆண்டு அண்ட்ராய்ட் 10 ஆகவும், அடுத்த ஆண்டு ஆண்ட்ராய்டு 11 ஆகவும், அதன்பின் அப்படியாகவே தொடரும்

நினைவுகூர, ஆண்ட்ராய்டின் பொதுவில் கிடைக்கக்கூடிய முதல் பதிப்பு 'ஆண்ட்ராய்ட் 1.5 - கப்கேக்' என பெயரிடப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் பிற ஆண்ட்ராய்ட் பதிப்புகள் எந்த இனிப்பின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள்.

  • ஆண்ட்ராய்ட் 1.5 - கப்கேக் (Android 1.5 – Cupcake)
  • ஆண்ட்ராய்ட் 1.6 - டொனட் (Android 1.6 – Donut)
  • ஆண்ட்ராய்ட் 2.0, ஆண்ட்ராய்ட் 2.1 - எக்லையர் (Android 2.0, Android 2.1 – Éclair)
  • ஆண்ட்ராய்ட் 2.2 - ஃப்ரொயோ (Android 2.2 – Froyo)
  • ஆண்ட்ராய்ட் 2.3, ஆண்ட்ராய்ட் 2.4 - ஜிஞ்சர்ப்ரட் (Android 2.3, Android 2.4 – Gingerbread)
  • ஆண்ட்ராய்ட் 3.0, ஆண்ட்ராய்ட் 3.1,ஆண்ட்ராய்ட் 3.2 - ஹனிகோம்ப் (Android 3.0, Android 3.1, Android 3.2 – Honeycomb)
  • ஆண்ட்ராய்ட் 4.0 - ஐஸ்கிரீம் சேண்ட்விச் (Android 4.0 – Ice Cream Sandwich)
  • ஆண்ட்ராய்ட் 4.1 - ஜெல்லி பீன் (Android 4.1 – Jelly Bean)
  • ஆண்ட்ராய்ட் 4.4 - கிட்கேட் (Android 4.4 – KitKat)
  • ஆண்ட்ராய்ட் 5 - லாலிபாப் (Android 5 – Lollipop)
  • ஆண்ட்ராய்ட் 6 - மார்ஷ்மல்லோ (Android 6 – Marshmallow)
  • ஆண்ட்ராய்ட் 7 - நோகட் (Android 7 – Nougat)
  • ஆண்ட்ராய்ட் 8 - ஓரியோ (Android 8 – Oreo)
  • ஆண்ட்ராய்ட் 9 - பை (Android 9 – Pie)
 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Android 10, Android Q, Google
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.