Amazon Prime Day Sale ஆரம்பம்.. எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு ஆஃபர்?

விளம்பரம்
Written by Harpreet Singh மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2020 11:09 IST
ஹைலைட்ஸ்
  • ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி
  • HDFC வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி
  • இரண்டு நாட்கள் அமேசான் பிரைம் டே சேல் நடைபெறுகிறது

ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் டி தற்போது  பிரைம் டே சேலில் 35,999 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Photo Credit: Amazon India

அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கில் அமேசான் பிரைம் டே சேல் இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் எந்தந்த ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு ரூபாய் தள்ளுபடி என்பதை இங்குப் பார்க்கலாம்.

ஆப்பிள் ஐபோன் 11
இந்த ஆண்டின் புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் காத்திருக்க விரும்பவில்லை என்றால், அல்லது புதிய ஐபோன் மாடலுக்கான முழு விலையையும் செலவிட விரும்பவில்லை என்றால், கடந்த ஆண்டு ஐபோன் 11 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி வேரியன்ட் தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளலாம். 
விலை: ரூ. 59,900 (அசல் விலை ரூ. 68,300)

ஒன்பிளஸ் 7T
ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் தற்போது  பிரைம் டே சேலில் 35,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 39,999 ஆகும். HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கட்டணமில்லா ஈஎம்ஐ வசதியும் உண்டு.
விலை: ரூ. 35,999 (அசல் விலை ரூ .39,999)

ஒன்பிளஸ் 7T ப்ரோ
பழைய ஸ்மர்ட்போன்களைப் பற்றிப் பேசுகையில், ஒன்பிளஸ் 7T ப்ரோ, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 43,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 53,999 ஆகும். 

விலை: ரூ. 43,999 (அசல் விலை ரூ. 53,999)

ஒப்போ ரெனோ 4 ப்ரோ
ஒப்போ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரெனோ 4 ப்ரோவும் அமேசான் பிரைம் டே சேலில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு புதிய ஸ்மார்ட்போன் என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் தள்ளுபடி இருக்காது. அமேசான் பே வழியாக 3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒப்போ ரெனோ 4 ப்ரோவை 31,990 ரூபாய்க்கு (அசல் விலை ரூ .34,990) வாங்க முடியும். ரூ. 14,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.

விலை: ரூ. 34,990 (அசல் விலை ரூ. 37,990)

Advertisement

ரெட்மி கே 20 ப்ரோ (6 ஜிபி, 128 ஜிபி)
ஷாவ்மியின் ரெட்மி கே 20 ப்ரோ 22,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 28,999 ஆகும். இதற்கு ரூ. 13,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது. ரெட்மி கே 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 855 SoC பிராசசர் உள்ளது.

விலை: ரூ. 22,999 (அசல் விலை ரூ .28,999)

சாம்சங் கேலக்ஸி S10
சாம்சங் கேலக்ஸி S10 இன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் தற்போது, பிரைம் டே 2020 விற்பனைக்கு அமேசானில் 44,999 ரூபாய்க்கு கிடைக்கிறது (அசல் விலை ரூ. 71,000). கேலக்ஸி எஸ் 10 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 10 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது. இந்த தொலைபேசி சாம்சங்கின் எக்ஸினோஸ் 9820 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 3,400 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 

Advertisement

விலை: ரூ. 44,999 (அசல் விலை ரூ .71,000)

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Prime Day 2020, Amazon sale, Amazon
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஹூவாய் புரா 90 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களின் வடிவமைப்பு, நிறம் மற்றும் சேமிப்பு விவரங்கள் உறுதியானது
  2. இன்ஸ்டாகிராமில் கருத்துகளை (Comments) எடிட் செய்யும் வசதி: 15 நிமிட கால அவகாசம் அறிமுகம்
  3. மார்ச் 2026 இந்திய போன் அறிமுகங்கள்: சியோமி 17 அல்ட்ரா, போகோ X8 ப்ரோ சீரிஸ், மோட்டோரோலா எட்ஜ் 70 மற்றும் பல
  4. கிளாட் மைத்தோஸ் விளக்கம்: ஆந்த்ரோபிக்கின் சைபர் செக்யூரிட்டி AI மாடல் பற்றி நீங்கள் அறிய வேண்டிய அனைத்தும்
  5. ஐபோன் 18 ப்ரோ: சிறிய டைனமிக் ஐலேண்ட் வசதியுடன் பல புதிய வடிவமைப்புகளை ஆப்பிள் நிறுவனம் சோதித்து வருகிறது
  6. சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு: போல்ட் 8 அறிமுக விவரங்கள் கசிவு; தேதி மற்றும் இடத்தை இங்கே காணுங்கள்
  7. மோட்டோ ஜி ஸ்டைலஸ் (2026) அறிமுகம்: ஆக்டிவ் ஸ்டைலஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் வசதி
  8. ஐபோன் 18 முந்தைய பதிப்பின் அதே வடிவமைப்பைத் தக்கவைக்கும்; ஐபோன் ஏர் 2 அறிமுக காலவரிசை குறித்த தகவல்
  9. மோட்டோ பேட் (2026) 7,040mAh பேட்டரி, 11-இன்ச் 2.5K டிஸ்ப்ளேயுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  10. சீன அறிமுகத்திற்கு முன் ரெட்மி K90 மேக்ஸ் வடிவமைப்பு, நிறம் மற்றும் ரெட்மி K பேட் 2 குறித்த விவரங்கள் வெளியீடு
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.