அமேசான் இந்தியா நிறுவனம், ஹானர் போன்களுக்கான சிறந்த சலுகைகளை ஹானர் டேஸ் சேல் என்று அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த விற்பனை மே 17 வரை தொடரும் எனவும் கூறியுள்ளது. இந்த விற்பனையில் ஹானர் வியூ 20, ஹானர் 9 லைட், ஹானர் 10 லைட், ஹானர் 8C, ஹானர் ப்ளே, ஹானர் 9N, மற்றும் ஹானர் 7C ஆகிய ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி பெறவுள்ளன. மேலும் இந்த விற்பனையின் பொழுது ஹானர் வியூ 20 வாங்கினால் அமேசான் பே-ல் 5,000 ரூபாய் வரை கேஷ்பேக் பெரும் வாய்ப்புள்ளது. அதே நேரம் ஹானர் ப்ளே ஸ்மார்ட்போனுக்கு 1,000 ரூபாய் வரையில் கேஷ்பேக் வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி, ஹானர் வாட்ச்கள் மட்டும் டேப்லெட்களுக்கும் சலுகைகளை வழங்கவுள்ளது அமேசான். இந்த விற்பனை மே 13 அன்றே துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹானர் டேஸ் சேல்: ஹானர் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் வாட்ச்களுக்கான சலுகைகள்!
இந்த விற்பனையில் ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனை எந்த வங்கியின் கிரடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெற்றலும் 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கவுள்ளது அமேசான். 6GB RAM + 128GB சேமிப்பு கொண்ட இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் விலை, 38,999 ரூபாய். அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு கொண்ட இந்த ஹானர் வியூ 20 ஸ்மார்ட்போனின் விலை, 45,999 ரூபாய்
4GB + 64GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 9N-ன் விலை, 9,999 ரூபாய் மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த பொழுது, இதன் விலை 13,999 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், 4GB + 128GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 9N-ன் விலை, 11,999 ரூபாய் மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்த பொழுது, இதன் விலை 17,999 ரூபாயாக இருந்தது.
14,999 ரூபாய் மதிப்பு கொண்ட 4GB + 64GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 8X-ன் விலை, 12,999 ரூபாய். இதன் இன்னொரு வகையான 6GB + 64GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 8X-ன் விலை, 14,999 ரூபாய். இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்பொழுது, இதன் விலை 16,999 ரூபாயாக இருந்தது.
அதேபோல, 19,999ரூபாய் மதிப்பு கொண்ட 4GB + 64GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 8X-ன் விலை, 13,999 ரூபாய். இதன் இன்னொரு வகையான 6GB + 64GB சேமிப்பு அளவு வகை கொண்ட ஹானர் 8X-ன் விலை, 15,999 ரூபாய் என விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
3GB+ 32GB வகை கொண்ட ஹானர் 7C-யின் விலை 7,999 ரூபாய் எனவும், 4GB + 64GB சேமிப்பு அளவு கொண்ட மற்றொரு வகை ஹானர் 7C-யின் விலை 9,499 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த இரண்டு போன்களும், 9,999 ரூபாய் மற்றும் 11,999 ரூபாய் என்ற விலையில் இருந்தது. ஹானர் 9 லைட் (4GB + 64GB)-ன் விலை 14,999 என்று இருந்த அறிமுக விலையில் இருந்து 9,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹானர் 10 லைட்-ற்கும் சலுகைகளை அளித்துள்ளது அமேசான் நிறுவனம். அதன்படி, 3GB + 32GB வகையிலான இந்த ஸ்மார்ட்போன், 10,999 ரூபாயிற்கும் மற்றும் 4GB + 64GB வகைஹானர் 10 லைட், 12,999 ரூபாயிற்கும் விற்பனையாகவுள்ளது.
வாட்ச்களுக்கான சலுகைகள் பற்றி பார்க்கையில் ஹானர் பேண்ட் 4 2,599 ரூபாயிலிருந்து 2,399 ரூபாயாகவும், ஹானர் பேண்ட் 4 ரன்னிங் எடிசன் 13,999 ரூபாயிலிருந்து 11,999 ரூபாயாகவும், ஹானர் வாட்ச் மேஜிக்கும் 13,999 ரூபாயிலிருந்து 11,999 ரூபாயாகவும் விலை குறைத்து விற்பனையாகவுள்ளது.
ஹானர் மீடியாபாட் T3 10 மற்றும் மீடியாபாட் T3 8 ஆகியவை 14,999 ரூபாய் மற்றும் 12,999 ரூபாயிலிருந்து, விலை குறைக்கப்பட்டு 11,499 ரூபாய் எனவும் 10,499 எனவும் விற்பனையாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்