அமேசான் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான தனது வாடிக்கையான ஃபிரீடம் சேல் 2019 விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. ஃபிரீடம் சேல் விற்பனைக்காக எஸ்பிஐ வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்த ஆன்லைன் நிறுவனம், எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கு, இந்த விற்பனை ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 7 ஆம் தேதி மதியம் 12 மணிக்கே துவங்கவுள்ளது. மொபைல் மற்றும் சாதனங்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ள இந்த விற்பனையில் சாம்சங் கேலக்சி M40 மற்றும் ஒப்போ K3 போன்ற ஸ்மார்ட்போன்கள் விலைக் குறைப்பை பெற்றுள்ளது, மேலும் ஒன்பிளஸ் 7 Pro கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒன்ப்ளஸ் 7 Pro-விற்கு விலை இல்லாத ஈஎம்ஐ வசதிகளும் இந்த விற்பனையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 48,999. அதன் முக்கிய சிறப்பம்சங்களில் மூன்று பின்புற கேமரா, 16 மெகாபிக்சல் பாப்-அப் செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் மற்றும் 4,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.
ஒன்பிளஸ் 7, ஒப்போ ரெனோ, விவோ V15, சாம்சங் கேலக்சி நோட் 9, மற்றும் ஒப்போ F11 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களும் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியைப் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்சி S10, சாம்சங் கேலக்சி M40, சாம்சங் கேலக்சி M30, சாம்சங் கேலக்சி M20, ரெட்மீ Y3, ஒப்போ A7, ஹானர் வியூ 20, மற்றும் ஒப்போ K3 ஆகிய ஸ்மார்ட்போன்கள் விலைக் குறைப்பை பெற்றுள்ளன, ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடி விலை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஹூவாய் Y9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனும் இந்த ஃப்ரீடம் சேல் விற்பனையில் விரைவில் வருகிறது என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது, இது விற்பனை காலத்தில் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கப்பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவர் பேன்க்கள், கேபிள்கள் மற்றும் சார்ஜர்கள், புளூடூத் ஹெட்செட்கள் மற்றும் ஸ்மார்ட்போன் கேஸ்கள், கவர்கள் என அனைத்தும் அமேசான் இந்தியா இணையதளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கப்பெரும்.
எலக்ட்ரானிக்ஸ் பக்கத்தில், ஸ்மார்ட்வாட்ச்கள், கேமராக்கள் மற்றும் மற்றசாதனங்கள் ஆகியவை 50 சதவீதம் வரை தள்ளுபடியுடன் பட்டியலிடப்பட்டுள்ளது, ஹெட்போன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் 60 சதவீதம் வரை தள்ளுபடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, 30,000 ரூபாய் வரை மடிக்கணினிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டிகளை வாங்குபவர்கள் 35,000 ரூபாய் வரையிலும், வாசிங் மெசின்களை வாங்குபவர்கள் 11,000 ரூபாய் வரையிலும் இந்த விற்பனையில் தங்கள் பணத்தை சேமித்துக்கொள்ளலாம். தொலைக்காட்சி மற்றும் ஏசிகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எக்கோ சாதனங்கள், ஃபயர் டிவி ஸ்டிக் மற்றும் அமேசான் கின்டெல் என அனைத்திற்கும் 5,000 ரூபாய் வரை தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.
வீடு மற்றும் சமையலறை, உடைகள் மற்றும் டெய்லி எசென்ஷியல்ஸ் போன்ற வகைகளும் விலைக் குறைப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கென அமேசான் இந்தியாவில் ஒரு பிரத்யேக பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்