Google Doodle-ஸ் சமீப காலமாக, கொண்டாட்டங்கள், வரலாற்று நிகழ்வுகள் மற்றும் முக்கியமான நபர்களின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டு விழாக்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொரோனா வைரஸுக்கு எதிரான போராடிய அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் கூகுளின் சமீபத்திய டூடுல் 'நன்றி கொரோனா வைரஸ் உதவியாளர்கள்' ஆகும். இந்தியாவில் இன்றைய டூடுல் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய டூடுலில் GOOGLE-ல் இருக்கும் ‘E' ஒரு டாக்டரைப் போல தோற்றமளிக்கிறது. டூடுலைக் கிளிக் செய்வதன் மூலம் Corona.MyGov.in வலைத்தளத்திற்கான விளம்பரத்தை முக்கியமாகக் கொண்டுள்ளன. அதில் ‘அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும் நன்றி' என்ற உரையை டூடுல் காட்டுகிறது.
கூகுள் இந்தியாவின் யூடியூப் வீடியோவுக்கு மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இணைப்பு உள்ளது. இந்த கடினமான காலங்களில் பணியாற்றுவதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பதையும் இது காட்டுகிறது.
இந்தியாவில் ஏப்ரல் 13 திங்கட்கிழமை கூகுள் டூடுல் மற்ற நாடுகளில் ஏப்ரல் 7-ஆம் தேதிக்கான Google டூடுல் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 6-ஆம் தேதி பொது சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதன் மூலம் தொடங்கப்பட்டதாகும்.
டூடுல் நன்றி தெரிவித்த முக்கிய தினங்கள்:
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்