Photo Credit: Jio
JioFinance செயலி நிதித் தேவைகளுக்கான ஒரே ஒரு தீர்வாக வெள்ளிக்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (JFSL)மூலம் உருவாக்கப்பட்டது. தற்போது நாட்டில் உள்ள அனைத்து மொபைல் பயனர்களுக்கு கிடைக்கும் இந்த ஆப் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும், பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கும் மற்றும் பில் பணம் செலுத்துவதற்கும் வசதிகளை வழங்குகிறது. இது முதன்முதலில் மே மாதம் பீட்டா சேதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் JioFinance சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டதாக JFSL நிறுவனம் கூறுகிறது.
JFSL வெளியிட்ட தகவல்படி, JioFinance ஆப் Android பயனாளர்களுக்கு Google Play Store மற்றும் iOS சாதனங்களுக்கு App Store மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இது தவிர MyJio இயங்குதளம் மூலமாகவும் இதனை டவுன்லோட் செய்யலாம்.
JioFinance மூலம், பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை இணைப்பதன் மூலமும், ஆஃப்லைன் மூலம் கடைகளில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து UPI பணம் செலுத்தலாம் . இது ஆன்லைன் கட்டணங்கள் மற்றும் பணத்தை மற்ற பயனர்களுக்கு அனுப்பும் வசதியை கொடுக்கிறது. JioFinance ஆப் உள்ளே இருக்கும் UPI இன்டர்நேஷனல் அம்சம் எல்லை தாண்டிய பணம் செலுத்தும் முறைகளையும் அனுமதிக்கிறது. UPI ஐடிகளை அகற்றுவது, வங்கிக் கணக்குகளை மாற்றுவது மற்றும் செட்டிங் அமைப்பது போன்ற பல்வேறு அமைப்புகளை ஆப் மூலம் நிர்வகிக்கலாம். JioFinance ஆப் மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு UPI பரிவர்த்தனைக்கும் சலுகைகள் வழங்கப்படும்.
மேலும், JioFinance ஆப் மூலம் மூன்று ஸ்டெப்பில் ஜீரோ பேலன்ஸ் வங்கி சேமிப்புக் கணக்குகளைத் திறக்க முடியும். இது வங்கி அனுபவத்தை எளிதாக்கும் என நிறுவனம் கூறுகிறது. உங்களின் அனைத்துச் சேமிப்பிற்கும் 3.5% வட்டி விகிதம் தருவதாக கூறப்படுகிறது. இந்தக் கணக்கைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் NEFT அல்லது IMPS வசதி மூலமாகவும் பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம். கூடவே டெபிட் கார்டையும் பெறலாம்.
ஜியோ ஃபைனான்ஸ் மற்ற கட்டணச் சேவை ஆப்களை போன்றே பல்வேறு செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. அதாவது பில் கட்டலாம், மொபைல், FASTag, DTH ரீசார்ஜ்கள் மற்றும் கிரெடிட் கார்டு பில் கட்டணம். லோன் ஆன்-சாட் அம்சத்தின் மூலம், பயனர்கள் கடன்கள், பரஸ்பர நிதிகள் மற்றும் சொத்துக்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட கடன்களைப் பெறலாம். அவற்றை மாற்றவும் முடியும். JFSL நிறுவனம் வாங்கும் கடனுக்கு ஒரே நேரத்தில் முழுத் தொகைக்கும் சேர்த்து வட்டி செலுத்த வேண்டும் என்று கூறுகிறது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் வழங்கப்படும் கடன் வசதி அனைத்து சம்பளம் பெறும் மற்றும் MSME வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும்.
இது தவிர JioFinance ஆப் காப்பீட்டு வசதியையும் தருகிறது. JioFinance ஆப் உள்ளே பயனர்கள் லைப், உடல்நலம், இருசக்கர வாகனம் மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் திட்டங்களை சரிபார்த்து பெறலாம். JioFinance ஆப் உள்ளே mPIN மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக உள்ளது. மின்சாரம், தண்ணீர், குழாய் எரிவாயு, பிராட்பேண்ட், லேண்ட்லைன் போன்றவற்றுக்கான கட்டணம் செலுத்தும் முறைகளும் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்