'அதைக் கூட்டி... இதைக் கழித்து...'- நெட்ஃப்ளிக்ஸின் 'அடடே' கணக்கு விளம்பரம்...!

'அதைக் கூட்டி... இதைக் கழித்து...'- நெட்ஃப்ளிக்ஸின் 'அடடே' கணக்கு விளம்பரம்...!
விளம்பரம்

உலக பிரபலமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது இண்ஸ்டாகிராமில் ஹைபர் ஆக்டிவாக உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு நண்பர்கள் தினத்தன்று ஒரு மீம் பகிர்ந்திருந்தனர் நெட்பிளிக்ஸ்.

‘யாரென்றே தெரியாமல் முகமறியாதவருடைய நெட்பிளிக்ஸ் அக்கவுண்ட் உபயோகிப்பவர்களே, அந்த முகமறியாத நண்பருக்கு ஹாப்பி ப்ரெண்ட்ஷிப் டே கூறுங்கள்' என இருந்தது. அது செம வைரல் ஆகியது.

தற்போது பிரபலமான படங்கள் மற்றும் சீரிஸ்களை வைத்து ஓர் கணக்கு புதிரை பதிவித்துள்ளது நெட்பிளிக்ஸ்.

((Shades of Grey) + (Days Sartaj has to save the city in season 1) X (Number of friends in Friends) + (Frontier in Triple frontier) - (Number of idiots in the movie where “Aal Izz Well'))- 1 = ? என்பதே அந்த கணக்கு.

Breaking BODMAS.

A post shared by Netflix India (@netflix_in) on

சம்பந்தமே இல்லாமல் ஏன் இப்படி ஒன்றை நெட்பிளிக்ஸ் பதிவிட்டது என நீங்கள் கேட்டால், இது நெட்பிளிக்ஸ் தங்களுக்கு தாங்களே செய்து கொள்ளும் விளம்பரமாகும். ஆம். எப்படி என கேட்கிறீர்களா?

Shades of Grey – பிரபலமான புத்தகம்/படமான இதன் முழு பெயர் '50 Shades of grey'. அதன் மூலம் இதற்கான பதில் 50.

Days Sartaj has to save the city in season 1 – ஆகஸ்ட் 15 பிரபல சீரிஸான சாக்ரட் கேப்ஸின் இரண்டாம் சீசன் வருகிறது. அதன் முதல் சீசனில் சிட்டியை காப்பாற்ற சர்தஜிடம் 25 நாட்கள் மட்டுமே இருக்கும். இதற்கான பதில் 25

Number of friends in Friends – அதிரிபுதிரி ஹிட்டான ப்ரெண்ட்ஸ் சீரிஸில் வரும் நண்பர்கள் ரசேல், மோனிக்கா, போபி, ஜோய், சண்ட்லர், ரோஸ் என ஆறு பேர் ஆவார்கள். இதற்கான பதில் ஆறு.

Frontier in Triple frontier – மூன்று.

Number of idiots in the movie where “Aal Izz Well' – 3 இடியட்ஸ் / நண்பன் படத்தில் இருக்கும் கதாநாயகர்களின் எண்ணிக்கை மூன்று. இதற்கான பதில் மூன்று.

இதனை அந்த கணக்கில் போட்டு பார்த்தால் , ((50) + (25) X (6) + (3) – (3)) – 1 = 199.

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு என பிரத்யேக பிளான் ஒன்றை அறிமுகம் செய்தது. மொபைலில் மட்டும் நெட்பிளிக்ஸ் உபயோகிக்க 199 ரூபாய் பிளான் தான் அது.

அதற்கான விளம்பரத்தை தான் இப்படி கணக்கு மூலம் பதிவித்துள்ளனர் நெட்பிளிக்ஸ்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Netflix, Netflix plan prices, Netflix plans
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »