ஆதார் தகவல் மாற்றம் குறித்த விவரங்களை இப்போது பதிவிறக்கம் செய்யலாம்

ஆதார் தகவல் மாற்றம் குறித்த விவரங்களை இப்போது பதிவிறக்கம் செய்யலாம்
ஹைலைட்ஸ்
  • ஆதார் தகவல் மாற்றங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்
  • பீட்டா பதிப்பு இணையதளத்தில் வெளியீடு
  • பலவிதங்களில் ஆதார் அட்டை தகவல் மாற்றம் வசதி உதவும்
விளம்பரம்

UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு) சார்பில் ஆதார் அட்டை புதுபித்த வரலாறினை அறிந்து கொள்ள வாடிக்கையாளர்களுக்குப் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தகவல்களை பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளர்கள் பிற சேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

திரு.அஜய் பூஷன் பாண்டே, தலைமை நிர்வாக அதிகாரி, UIDAI கூறியதாவது, "மக்கள் தங்களின் ஆதார் அட்டையில் செய்துள்ள மாற்றங்கள் குறித்த தகவல்களை UIDA இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதன் மூலம் முகவரி மாற்றம் குறித்த தகவல்களை பிற சேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இணையதளத்தில் பீட்டா பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.

"இந்த வசதியை பெற்றுக்கொள்ள, www.uidai.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று, ஆதார் அப்டேட் ஹிஸ்டரி என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். அதில் ஆதார் அட்டை எண், பாதுகாப்பு கடவுச்சொல் பதிவு செய்வதன் மூலம், OTP எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டு வரும். அதை பதிவு செய்த பின்னர், ஆதார் தகவல் மாற்றம் குறித்த விவரங்களை பெறலாம். அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்றார்.

கால அட்டவணை வரிசையில், ஆதார் அட்டையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெயர், பிறந்த தேதி, பாலினம், வீட்டு முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன என UIDAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ந்த UIDAI தலைமை நிர்வாக அதிகாரி, “வேலை வாய்ப்புகளுக்கு, பள்ளி சேர்க்கையில், மற்றும் பிற சேவைகளுக்கு இந்த ஆதார் அட்டைத் தகவல் மாற்றம் வசதி உதவியாக இருக்கும்.” என்றார்.

“ஆதார் எண் தனித்துவ அடையாளமாக மட்டும் இல்லாமல், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பெரிதும் நம்பப்படுகிற அடையாள அட்டையாக மாறிவருகின்றன” என்றார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Internet, India, Aadhaar, UIDAI
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »