அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டுமே இதுவரை `டெமோ டே'-வை நடத்தி வந்த கூகுள் நிறுவனம் முதன்முறையாக, ஆசியாவில் கால் பதிக்கப் போகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, சீனாவில் உள்ள ஷாங்காய் நகரத்தில் இந்த `டெமோ டே' நத்தப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த திங்கள் கிழமை கூகுள் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கூகுள் இந்த `டெமோ டே'-வை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் முதலீடு செய்ய தகுதி கொண்ட ஸ்டார்ட்-அப்ஸ்-களை கூகுள் கண்டறியும். மேலும், உலக அளவில் ஸ்டார்ட்-அப்ஸ்-களை விரிவாக்கம் செய்யவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் முடியும்.
இது குறித்து கூகுள் நிறுவனம், `எங்கள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்த வருடத்தின் ஆரம்பித்தில் சொன்னது போல, இது தான் ஆசிய கண்டத்தில் நாங்கள் முதன் முதலாக ஒருங்கிணைக்கும் `டெமோ டே'. இதன் மூலம், இந்தப் பகுதியில் இருக்கும் புத்தம் புது ஐடியாக்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறோம்' என்று கூறினார்.
மேலும், `இந்த டெமோ டே-வின் மூலம் ஆசிய கண்டத்தில் ஸ்டார்ட்-அப்ஸ், சர்வதேச அளவில் அவர்களின் கண்டுபிடிப்பை எடுத்துச் செல்ல முடியும். மேலும், உலகளாவிய முதலீட்டாளர்களையும் கவர முடியும்' என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த டெமோ டே-வில் பங்கேற்க, ஒரு ஸ்டார்ட்-அப் சட்டபூர்வமாக பதிய செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆசியாவில் அதன் தலைமையிடம் கட்டாயம் இருக்க வேண்டும். இதுவரை 34 லட்சம் வருவாய் ஈட்டியிருக்க வேண்டும். ஜூலை 1 ஆம் தேதியே இதற்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்