வழிகளில் இருக்கும் ஆபத்தை கண்டுபிடிக்க உதவும் கூகுள் மேப்ஸின் அப்டேட்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 15 மார்ச் 2019 18:49 IST
ஹைலைட்ஸ்
  • பதுகாப்பான பயணத்துகான கூகுள் மேப்ஸின் புதிய அப்டேட்!
  • அண்டுராய்டு போனில் மட்டுமே தற்போதைக்கு அறிமுகமாகியுள்ளது.
  • கடந்த ஆண்டே வெளியாகியுள்ளதாக தகவல்!

இந்த வசதி கடந்த ஆண்டே அறிமுகம் செய்யப்பட்டது.

வாகனத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்படுத்தக்கூடிய இடமோ அல்லது வேகமாக செல்லக்கூடாத இடமோ இருக்கும் எனில் அதை பதிவு செய்யும் வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்துள்ளது. 

கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட (Waze) வேஸ் ஆப்பில் இது போன்ற விபத்து பகுதி மற்றும் கவனமாக செல்ல வேண்டிய பகுதிகளை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும் வசதியுடன் வெளியானது. இந்த ஆப்பை மாதிரியாக வைத்து இந்த புதிய அப்டேட்டை தற்போது கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

அண்டுராய்டு போன்களில் இந்த அம்சங்களுடன் கூகுள் மேப்ஸ் அப்டேட்டை பெற்றுள்ள நிலையில் விரைவில் இந்த அப்டேட்கள் ஐபோன்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் பரவலாக வெளியாகி வரும் இந்த அப்டேட் பல இடங்களில் காத்திருக்கும் ஆபத்துக்களை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வேஸ் ஆப்பில் ரிப்போர்ட் செய்யும் அதே முறையில் கூகுள் மேப்ஸிலும் செய்யலாம். மேல் நோக்கி இருக்கும் அம்பு குறியை தேர்வு செய்தோ அல்லது கீழ் இருக்கும் ரிப்போர்ட் பட்டனை அழுத்தினால் கூட விபத்து மற்றும் அபாயமான இடங்களை குறித்துகொள்ள முடியும். இப்படி பட்டனை அழுத்திய பிறகு கூகுளில் நேரடியாக நாம் எதிர்கொண்ட ஆபத்தையோ அல்லது பார்த்த அபாயத்தையோ பதிவு செய்ய முடியும்.

இப்படி பலரும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள விபத்துக்களை குறிக்கும்போது  ஓட்டுனர் ஒரு குறிப்பிட்ட ஆபத்தான வழியில் செல்லாமல் பாதுகாப்பாக பயணத்தை தொடர முடியும். மேலும் இந்த அறிவிப்புகள் நாம் பயணத்தை துவங்கிய பின்னரே காண முடிகிறது. கூகுள் மேப்ஸில் விபத்து மற்றும் முக்கிய அபாயத்தை மட்டுமே அறிவிப்பு செய்ய முடிகின்ற நிலையில் மற்ற ஆபத்துகளை குறிப்பிட முடிவதில்லை. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில் கூகுள் நிறுவனத்திடம் இருந்து பதிலுக்காக காத்திருக்கிறோம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Google Maps for Android, Google Maps, Google
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.