Photo Credit: Amazon India
அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு இன்று 12 மணிக்கு ஆரம்பமானது ‘அமேசான் சம்மர் சேல்'. மற்றவர்களுக்கு நாளை மதியம் 12 மணியளவில்தான் இந்த தள்ளுபடி விற்பனைத் தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்த அதிரடி தள்ளுபடி விற்பனை, மே 7 ஆம் தேதி வரை தொடரும். ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள், டிவி, ஹெட்போன்ஸ், ஸ்பீக்கர்கள், பிற சாதனங்கள் என பலவற்றுக்கு இந்த சிறப்பு சேல் மூலம் தள்ளுபடி கொடுக்கப்பட உள்ளது. அமேசான் நிறுவனம் இந்த சேலுக்ககாக, எஸ்பிஐ வங்கியுடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம், எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி பொருட்களை வாங்குவோருக்கு 10 சதவிகித உடனடி கேஷ்-பேக் கொடுக்கப்படும்.
ஸ்மார்ட் போன்களைப் பொறுத்தவரை இந்த சேலில், 40 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சில போன்களுக்கு ‘இதுவரை இல்லாத அளவுக்கு ஆஃபர்' கொடுக்கப்பட உள்ளதாக அமேசான் கூறியுள்ளது.
சில பட்ஜெட் போன்களுக்கு இந்த சம்மர் சேல் மூலம் ஆஃபர்கள் கிடைக்க உள்ளது. சியோமி எம்ஐ A2, ரூ.10,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.17,499). ரெட்மி 6A, ரூ.5,999 கிடைக்கும். இதற்கு 500 ரூபாய் அமேசான் கேஷ்-பேக் ஆஃபரும் கிடைக்கும். ரெட்மி 6 ப்ரோ, 9999 ரூபாய்க்கு கிடைக்கும் (எம்.ஆர்.பி ரூ.13,499). ஹானர் 8X, ரூ.12,999 கிடைக்கும் (எம்.ஆர்.பி விலை 17,999).
ஸ்மார்ட் போன்களை தவிர இந்த சம்மர் சேல் மூலம், பல மின்னணு சாதனப் பொருட்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன. மின்னணு சாதனப் பொருட்களுக்கு 55 சதவிகிதம் வரை இந்த சேல் மூலம் தள்ளுபடி கொடுக்கிறது அமேசான். சில குறிப்பிட்ட லேப்டாப்களுக்கு அமேசான் நிறுவனம், ரூ.32000 வரை தள்ளுபடி கொடுக்கிறது. ஹெட்போன்ஸ் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
புத்தகங்களுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடியும், வீடியோ கேம்களுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடியும், அமேசான் நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளுக்கு 60 சதவிகிதம் வரை தள்ளுபடியும் இந்த சேல் மூலம் கொடுக்கப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்