சியோமி தனது தொலைக்காட்சி தயாரிப்பான எம்ஐ TV 4A ப்ரோ 49-யின் இந்திய விலையை குறைத்துள்ளது. புதிய தொழிநுட்பத்திடன் வெளியான இந்த ஆண்டுராய்டு வகையை சேர்ந்த எம்ஐ தொலைக்காட்சி, இந்தியாவில் ரூ.29,999க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது திடீரென 1,000 ரூபாய் குறைந்து விற்பனைக்கு வெளியாகி வருகிறது.
இதைதொடர்ந்து அமேசான், ஃபிளாப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்களில் இந்த விலைகுறைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் சார்பில் சில தினங்களுக்கு முன்னர் எம்ஐ TV 4A ப்ரோ 55 இஞ்ச் தொலைக்காட்சியின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய விலை குறைப்பு தற்போது வெளியாகியுள்ளது.
குளோபல் துணை தலைவரும் இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான மனு குமார் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த விலை குறைப்பை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும் சியோமி நிறுவனம் சார்பில் எம்ஐ டிவி 4சி ப்ரோ 32 ரூ.2000 குறைந்துள்ளது. அதுபோல் எம்ஐ TV 4A ப்ரோ 32 இஞ்ச் தொலைக்காட்சி ரூ.1,500 குறைந்து தற்போது ரூ.12,499 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகறிது.
ஹெச்டி, எல்இடி திரை மற்றும் 64-பிட் அமலாஜிக் பிராசஸ்சரை கொண்டுள்ளது. 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ள இந்த தொலைக்காட்சி 20W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டுராய்டு தொலைக்காட்சி சியோமியின் பாட்ச்வால் மென்பொருளை கொண்டு இயங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்