தொடரும் பப்ஜி தடை... தீர்வுக்கு முயலும் 'டென்சென்ட் இந்தியா' நிறுவனம்!

தொடரும் பப்ஜி தடை... தீர்வுக்கு முயலும் 'டென்சென்ட் இந்தியா' நிறுவனம்!

குஜராத்தில் பப்ஜி விளையாட்டிற்குத் தடை உள்ளது!

ஹைலைட்ஸ்
  • டென்சென்ட் நிறுவனம் சார்பில் பப்ஜி தடையை நீக்க முயர்ச்சி!
  • குஜராத்தில் பப்ஜி விளையாட்டிற்கு தடை!
  • பல தரப்பினர் இந்த விளையாட்டை குறித்து புகார்!
விளம்பரம்

நாடு முழுவதும் பப்ஜி விளையாடிதற்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளிபடுத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் ஜம்மூ காஷ்மீரில் பப்ஜிக்கு எதிராக நடந்த போராட்டம், மும்பையில் ஸ்மார்ட்போன் வாங்கி தராதலால் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது, போன்ற பல சம்பவங்களின் தொடர்ச்சியாக பப்ஜி விளையாட்டிற்கு குஜராத் அரசு தடை விதித்தது. 

சில தினங்களுக்கு முன்னர் இந்த கேமை விளையாடியதால் 10 இளைஞர்களை ராஜ்கோட் போலீசார் கைது செய்தனர். இது குறித்து, பப்ஜி விளையாட்டை உருவாக்கிய டென்சென்ட் நிறுவனம் கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
 

 

அந்நிறுவனத்தின் அறிக்கையில், 'பப்ஜி என்பது ஒரு விளையாட்டாகும். அது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகும். அதை நாம்தான் ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான முறையில் விளையாட வேண்டும். இந்தியாவில் இந்த விளையாட்டின் பிரச்னை வராமல் இருக்க நாங்கள் ஒரு புதிய வெர்ஷனை தயாரித்து வருகிறோம். இந்த புதிய அப்டேட்டில் பாதுகாப்பான காட்சிகள் மற்றும் சிறு வயதினருக்கு தகுந்த மாதிரி விளையாட்டின் நேர அளவு குறைத்தல் போன்ற பல முக்கிய அப்டேட்கள் புகுத்தப்படும்.

இந்த விளையாட்டை சில நகரங்கள் தடை செய்திருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த புதிய அப்டேட் வந்த பிறகாவது தடை நீக்கப்படும் என நம்புகிறோம்' எனக் கூறப்பட்டுள்ளது.

சில நாட்கள் முன்னர் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில், பப்ஜி விளையாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை மீறி விளையாடிய 10 நபர்களை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநில அரசு விதித்தத் தடை உத்தரவை மீறி பப்ஜி விளையாட்டிற்காக கைது செய்யப்பட்ட முதல் சம்பவம் இதுவேயாகும். மேலும் ராஜ்கோட் காவல்துறையினர் இந்த கேமை விளையாடிவர்களிடம் இருந்து விசாரணைக்காக தற்போது செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

'ரோந்து பணியின் போது காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் தாமோதர் காலாவாட், சாலை அருகே இருக்கும் தேநீர் விடுதி அருகில் பப்ஜி கேமை விளையாடிக் கொண்டிருந்த 6 நபர்களை கைது செய்ததாக' ராஜ்காட் தாலுகா காவல்துறை ஆய்வாளர் விஎஸ் வான்சாரா இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரிடம் கூறியுள்ளார்.

காலாவாட், 6 பேரிடமிருந்து ஸ்மார்ட்போன்களை கைப்பற்றிய பின்னர் சோதனை செய்து, இது தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளார். பின்னர் அவர்களுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாட்டினால் பிள்ளைகளுக்குப் படிப்பின் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகும், பிள்ளைகள் மத்தியில் தகாத வார்த்தைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் பரவுவதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து மோமோ சேலஞ்ச் மற்றும் பப்ஜி  விளையாட்டை தடை செய்ய குஜராத் மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

கடந்த மார்ச் 6 ஆம் தேதி, மோமோ சேலஞ்ச் மற்றும் பப்ஜி விளையாட்டுகளுக்குத் தடை விதிப்பதாக அரசு சார்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இது கடுமையான உத்தரவாக இருப்பதாகவும் பல ஆராயிச்சிகளின் முடிவில் இந்த விளையாட்டாலும் பிள்ளைகளுக்கு ஏற்படும் கோபத்திற்கும் சம்பந்தமில்லை என தெரியவந்தது எனவும் ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பப்ஜி விளையாட்டும் அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பெற்றோர்களுடன் சமீபத்தில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, 'தடையை விட அன்பாக அறிவுரை கூற வேண்டும்' எனத் தெரிவித்தார். தொழில்நுட்பம் நமது வாழ்கையை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும் எனவும் அது நம்மை அழித்துவிடக்கூடாது எனவும் அவர் கூறினார். 

மேலும் அவர், 'பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சரியாக வழிகாட்டினால் பிள்ளைகள் தானகவே ப்ளே ஸ்டேஷனை விட்டுவிட்டு விளையாட்டு மைதானத்திற்கு வந்துவடுவார்கள்' எனக் கூறினார்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Tencent, PUBG Mobile, PUBG ban
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »