PUBG மொபைலின் அடுத்த அப்டேட் ஏப்ரல் 24-ல் வெளியாகிறது! 

PUBG மொபைலின் அடுத்த அப்டேட் ஏப்ரல் 24-ல் வெளியாகிறது! 

Photo Credit: YouTube/ Mr.Ghost Gaming

PUBG மொபைலில் உள்ள மிராமர் 2.0-ல் வாட்டர் சிட்டி என்ற புதிய பகுதியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • PUBG மொபைல் அப்டேட் 0.18.0 ஏப்ரல் 24 அன்று வெளியிடப்படலாம்
  • மிராமர் 2.0 என்ற மிராமர் வரைபடத்தின் புதிய பதிப்பை இது கொண்டு வரும்
  • PUBG மொபைல் 0.18.0 அப்டேட் இரண்டு புதிய முறைகளைக் கொண்டுவரும்
விளம்பரம்

PUBG Mobile மிகவும் பிரபலமான மொபைல் கேம்களில் ஒன்றாகும். இது விகேண்டியின் வரைபடத்தில் கடந்த வாரம் புதிய ஆர்க்டிக் மோடை சேர்த்தது. இப்போது அதன் அடுத்த பதிப்பு குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. PUBG மொபைலின் வரவிருக்கும் அடுத்த அப்டேட்டின் பதிப்பு 0.18.0 ஆகும். இது ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என்று வதந்தி பரப்பப்படுகிறது. மேலும், சில புதிய மோடுகளைக் கொண்டு வரக்கூடும். இது தவிர, டெவலப்பர்கள் மிராமர் வரைபடத்தின் புதிய பதிப்பை வரவிருக்கும் PUBG மொபைல் அப்டேட்டில் சேர்க்கப் போகிறார்கள் என்றும் வதந்தி பரவியுள்ளது. குறிப்பாக, இந்த மாற்றங்கள் ஏற்கனவே PUBG மொபைல் பீட்டாவில் உள்ளன.

ஃபோஸ்பைட்ஸின் அறிக்கையின்படி, PUBG மொபைல் 0.18.0 அப்டேட் ஏப்ரல் 24 அன்று வெளியிடப்படலாம். மேலும் இது 2 ஜிபி அளவை விட அதிகமாக இருக்கலாம். இந்த அப்டேட்டில் இருக்கும் புதிய அம்சங்களில், மிராமர் 2.0 என அழைக்கப்படும், மிராமர் வரைபடத்தின் புதிய பதிப்பும் இருக்கக்கூடும். 

இது தவிர, சேஃப்டி ஸ்கிராம்பிள் மோட் மற்றும் ஜங்கிள் அட்வென்ச்சர் கைடு மோடுடன் வேறு சில சிறிய மாற்றங்களையும் உள்ளடக்கியதாக வதந்தி பரவியுள்ளது. இருப்பினும் இந்த அம்சங்கள் ஏற்கனவே PUBG மொபைல் பீட்டா பதிப்பில் ஏப்ரல் 14 அன்று விளையாட்டின் நிலையான பதிப்பில் இருந்தது.

மிராமர் 2.0 வரைபடத்தில் ரேசிங் ரேம்ப் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. அதில் வாட்டர் சிட்டி என்று அழைக்கப்படும் புதிய பகுதி, கோல்டன் மிராடோ என்ற புதிய வாகனம் மற்றும் விற்பனை இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். இந்த விற்பனை இயந்திரங்கள் சுகாதார கருவிகள் மற்றும் ஆற்றல் பானங்கள் சேகரிக்க பயன்படுத்தப்படலாம். சேஃப்டி ஸ்கிராம்பிள் மோட் புதிய ஈவோ கிரவுண்ட் மோட் இருக்கக்கூடும்.


சேஃப்டி ஸ்கிராம்பிள் மோட்:

இதில் பாதுகாப்பான விளையாட்டு பகுதிக்குள் ஒரு ப்ளூ ஸோனும் இருக்கும். மேலும் வீரர்கள் இந்த புதிய ப்ளூ ஸோனிற்கு வெளியே இருக்க வேண்டும். அவர்கள் அதற்குள் வாழ்ந்தால், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இந்த அமைப்பு ஏற்கனவே PUBG-யின் பிசி பதிப்பில் Bluehole Mode உள்ளது.


ஜங்கிள் அட்வென்ச்சர் கைடு மோட்:

இது சான்ஹோக் வரைபடத்தின் ஒரு பகுதியாக இருக்கும், மேலும் இது குறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்றன. பிற மாற்றங்களில் சில புதிய முடிவுத் திரைகள், ஒரு புதிய பயிற்சி முறை, புதிய சாதனைகள், Win94 துப்பாக்கியில் scope ஆதரவு மற்றும் பல இருக்கலாம்.

0.18.0 அப்டேட்டை வெளியிடுவது குறித்து, இதுவரை PUBG மொபைல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனவே, நீங்கள் இந்த தகவலை ஒரு கசிவாக மட்டுமே எடுத்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்க வேண்டும்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PUBG, PUBG Mobile, PUBG Mobile update
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »