PUBG Update: பீட்டா வெர்ஷனில் Erangel 2.0 மேப் அறிமுகம்!

PUBG Update: பீட்டா வெர்ஷனில் Erangel 2.0 மேப் அறிமுகம்!

Photo Credit: Twitter/ PUBGm BETA

பப்ஜி மொபைல் பீட்டா வெர்ஷனில் எராங்கிள் 2.0 மேப் 1.0 அப்டேட்டுடன் வந்துள்ளது.

ஹைலைட்ஸ்
  • PUBG Mobile beta version gets 1.0 update
  • Erangel 2.0 seems major aesthetic changes in buildings
  • PUBG Mobile beta 1.0 is 1.52GB in size
விளம்பரம்

.இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்படுமா என்ற பரபரப்பு ஒருபுறம் ஏற்பட்டிருந்தாலும், பப்ஜி கேமோ சத்தமில்லாமல் தனது அப்டேட்டை செய்து வருகிறது. தற்போது, 1.0 அப்டேட்டுடன் Erangel 2.0 வரைபடம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பப்ஜி மொபைல் குழு தரப்பில், டிஸ்கார்ட் சேவையகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், எராங்கிள் 2.0 மேப் குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தையும் வெளியிடப்பட்டது. 1.0 அப்டேட் தற்போதைக்கு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. iOS பதிப்பில் விரைவில் வெளியாகிறது. 

பப்ஜியின் இந்த புதிய பதிப்பில் பல மாற்றங்கள் உள்ளன, அவற்றில் குறிப்பிடத்தக்கதும், மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும் எராங்கல் 2.0 வரைபடமாகும். இது பீட்டா அப்டேட் என்பதால், சாதாரண மொபைல் ஆப்பில் வரும் போது இன்னும்  பல மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PUBG மொபைல் பீட்டா 1.0 அப்டேட்
PUBG மொபைலுக்கான பீட்டா 1.0 அப்டேட் என்பது பப்ஜி பிரியர்களுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஏனெனில் இது 0.19.0 வெர்ஷனுக்குப் பிறகு 0.20.0 வராமல், நேரடியாக 1.0.0 அப்டேட்டுக்கு வந்துள்ளது.  நேரடியாக புதிய எராங்கல் 2.0 வரைபடத்தைக் கொண்டுவந்துள்ளது. 

அண்மையில் வந்த லிவிக் மேப் மற்றும் இதற்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட மேட் மிராமர் மேப் ஆகியவற்றைப் போல், சில அழகியல் மாற்றங்களைக் கொண்டுள்ளது. மைல்டா பவர், குவாரி, சிறைச்சாலை மற்றும் பிற பகுதிகளில் சில மாற்றங்கள் உள்ளன. வரைபடத்தில் அகழிகள், கைவிடப்பட்ட தொட்டிகள், தடுப்புகள் இன்னும் பிற விஷயங்களையும் புதிய அப்டேட்டில் பார்க்க முடிகிறது.

மேலும்,  சில பக்குகள் சரி செய்யப்பட்டு, M1014 என்ற புதிய ஆயுதமும் கொண்டு வரப்பட்டுள்ளது. சியர் பார்க் ஷோடவுன்கள் மற்றும் பலவற்றோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட பீட்டா பதிப்பை ஆண்ட்ராய்டு பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம். iOS பயனர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.  

விரைவில், ஒரு வேளை அப்டேட் லிங்க் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், சிறிது நேரம் கழித்து முயற்சி செய்து பார்க்கவும்.  பீட்டா 1.0 அப்டேட் செய்யும் பப்ஜி கேமர்கள்  டிஸ்கார்ட் சர்வரில் உள்ள குழுவுடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பப்ஜி அப்டேட்டின் மொத்த மெமரி 1.52 ஜிபி  ஆகும். 


Is Nord the iPhone SE of the OnePlus world? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: PUBG, PUBG Mobile, PUBG Mobile Beta
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO Z10 Turbo, iQOO Z10 Turbo Pro செல்போனில் இத்தனை ரகசியம் இருக்காம்
  2. Huawei Band 9 வாட்ச் நீங்க நீச்சல் அடிச்சல் கூட இது கண்காணிக்குமாம்
  3. என்னங்க சொல்றீங்க 2 ஆண்டுகளுக்கு YouTube Premium தரும் ஜியோ
  4. சாம்சங் இப்படிப்பட்ட அம்சத்துடனா இந்த செல்போனை வெளியிடுது
  5. கொடுக்கும் காசுக்கு வொர்த்! Oppo Reno 13 5G, Reno 13 Pro 5G செல்போன்கள்
  6. POCO X7 5G செல்போன் ஆரம்பமே இப்படி அடித்து ஆடினால் எப்படிங்க
  7. கால் முடிகளை கொண்டு வாசனை நுகரும் சிலந்திகள்! புதிய தகவல்
  8. Amazon Great Republic Day sale 2025 இப்போ விட்டா ரொம்ப வருத்தப்படுவீங்க
  9. 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் 5G செல்போன் கிடைக்குமா? இதோ கிடைக்குமே!
  10. புலி வருது வருதுன்னு சொல்லி சொல்லி நிஜமாவே வந்துடுச்சு OnePlus 13R
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »