ஃபோர்ட்நைட்: 3 மில்லியன் டாலர்களை வென்ற அமெரிக்க சிறுவன்!

விளம்பரம்
Written by Agence France-Presse மேம்படுத்தப்பட்டது: 29 ஜூலை 2019 12:13 IST

வெற்றிக் கொண்டாடத்தில் கைல் கியர்ஸ்டோர்ஃப்!

Photo Credit: Mike Stobe / GETTY IMAGES NORTH AMERICA / AFP

அமெரிக்காவை சேர்ந்த "புகா" என்கிற கைல் கியர்ஸ்டோர்ஃப்-தான் (Kyle Giersdorf), ஃபோர்ட்நைட் (Fortnite) கேமில் தனி பிரிவில் முதல் உலக சாம்பியன். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்த 16 வயது சிறுவன் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா, 3 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 22 கோடியே 66 லட்சம் ரூபாய்.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த இந்த இளம் கேமர் முதலில் விளையாடிய ஆறு ஆட்டங்களிலும் முன்னிலை வகித்தார், முதலிடத்தில் இருந்த இவர் சற்றும் கூட கீழே இறங்கவில்லை.

இறுதி ஆட்டத்தின் முடிவில் இவர் தனக்கு அடுத்து இருந்தவரை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிக புள்ளிகளை வைத்திருந்தார். (இவருடைய புள்ளிகள்-59, இரண்டாவது இடத்தில் இருந்தவரின் புள்ளிகள்-33)

யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் பல மில்லியன் டாலர்களை பரிசுத்தொகையாக கொண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஆறு ஆட்டங்களிலும், இந்த 16 வயது சிறுவன் தன் நிலையில் சீராகவே இருந்தார்.

இவரது நண்பர் கொலின் பிராட்லி (Colin Bradley) இறுதிப் போட்டிக்குப் பிறகு AFP -க்கு அளித்த பேட்டியில்,"இன்று காலையிலிருந்து அவர்  எந்த கவலையுமின்றி, உற்சாகமாகவே இருந்தார்" என கூறினார். 

இந்த விளையாட்டில், போட்டியாளர்கள் ஒரு தீவுக்குள் தள்ளப்படுகிறார்கள், அங்கு அவர்கள் மஆயுதங்களையும் பிற வளங்களையும் தேடி எடுத்து மற்ற வீரர்களை கொல்ல வேண்டும், இறிதியில் உயிருடன் இருப்பவர்களே வெற்றியாளர்.

"அவர் புத்திசாலிதனமான வீரர்களில் ஒருவர். எப்போது தாக்க வேண்டும், எப்போது தாக்கக்கூடாது, உயர்ந்த தரையில் இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அவர் ஒரு போர்த் திறன் வாய்ந்த வீரர்" என்று பிராட்லி கூறினார்.

"இது ஒரு விளையாட்டு என்று நிறைய பேர் நினைக்கிறார்கள், ஆனால் அவர் இந்த விளையாட்டிற்கான பயிற்சி, அர்ப்பணிப்பு, உறுதியுடன் இருக்கிறார்" என புகாவின் அத்தை டான் சீடர்ஸ் (Dawn Seiders) கூறினார்.

Advertisement

எபிக் கேம்ஸ் - ஃபோர்ட்நைட்டின் படைப்பாளிகள் - இந்த விளையாட்டின் தொடக்க நிகழ்விற்கு 100 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 700 கோடி) செலவிட்டனர்.

இந்த மூன்று நாள் போட்டிகளில், எபிக் கேம்ஸ் 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 200 கோடி) பரிசுத் தொகையை வழங்கியுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 50,000 டாலர்கள் (சுமார் 34.5 லட்சம் ரூபாய்) உறுதியான பரிசுத் தொகையை வழங்கியிருந்தது.

Advertisement

முன்னதாக சனிக்கிழமையன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவுப் போட்டியில் "நைஹ்ராக்ஸ்" மற்றும் "அக்வா" என்ற புனைப்பெயர்களைப் கொண்ட கேமர்கள் அந்த பிரிகில் முதல் ஃபோர்ட்நைட் உலக சாம்பியனானர்கள், இவர்களுக்கு தலா 1.5 மில்லியன் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியின் போது, ​​புகா மற்றுமின்றி இன்னும் மூன்று வீரர்களும் மில்லியனர்களாக மாறினர்: "சால்ம்" (Psalm) (1.8 மில்லியன் டாலர்கள்), "எபிக்வேல்" (Epikwhale) (1.2 மில்லியன் டாலர்கள்) மற்றும் கிரியோ (Kreo) (1.05 மில்லியன் டாலர்கள்) என்ற பரிசுத்தொகையை வென்றனர்.

13 வயதான அர்ஜென்டினா வீரர் "கிங்" எனப்படும் தியாகோ லாப், மில்லியன் டாலர் மதிப்பை (900,000 டாலர்கள்) சிறிய இடைவெளியில் தவறவிட்டார். இவர் இந்த போட்டியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். இவர் ஆறு போட்டிகளில் 21 போட்டியாளர்களை வென்றிருந்தார். 23 என்ற புகாவின் எண்ணிக்கையை அடுத்த சிறந்த எண்ணிக்கை இவருடையதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Bugha, Fortnite
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பேட்டரி பேக்கப்ல இனி இதான் "கிங்"! Honor Magic V6-ன் 7,150mAh பேட்டரி ரகசியம் அம்பலம்! மார்ச் 1-ல் அதிரடி லான்ச்
  2. மிரட்டலான 8000mAh பேட்டரியுடன் ரியல்மி Neo8 வந்தாச்சு! 165Hz டிஸ்ப்ளேல கேமிங் விளையாடினா சும்மா தீயா இருக்கும்
  3. ரியல்மி ரசிகர்களே ரெடியா? கம்மி விலையில புதுசா ஒரு Note சீரிஸ் போன் வருது! இதோட சார்ஜிங் பத்தி தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க
  4. iPhone 18 Pro-ல இனிமே அந்த பெரிய ஓட்டை இருக்காது! ஆப்பிளின் அடுத்த அதிரடி லீக்
  5. பார்க்கவே செம ராயலா இருக்கு! OPPO Find X9 Ultra-வின் டூயல்-டோன் டிசைன் லீக்! கேமரால அடுத்த சம்பவத்துக்கு ஒப்போ ரெடி
  6. வீடே அதிரும் அளவுக்கு சவுண்ட்! அமேசான் சேலில் JBL Charge 6 மற்றும் Marshall Middleton அதிரடி விலையில்! டாப் டீல்கள் இதோ
  7. சினிமாட்டிக் சவுண்ட் இப்போ பட்ஜெட் விலையில! அமேசான் சேலில் Rs. 4,499 முதல் அதிரடி சவுண்ட்பார் டீல்கள்
  8. பழைய லேப்டாப்பை மாத்த இதுதான் சரியான நேரம்! அமேசான் சேலில் HP Omnibook 5 மற்றும் Lenovo Yoga Slim 7 அதிரடி விலையில்
  9. துணிஞ்சு நனைக்கலாம்.. எவ்வளவு வேணா பேசலாம்! 7000mAh பேட்டரி மற்றும் IP69 ரேட்டிங்குடன் மிரட்டலாக வந்த OPPO A6 5G
  10. பழைய நினைவுகளைப் புதுப்பிக்க ஒரு 'சினிமா' டச்! ஃபுஜிஃபிலிம் இன்ஸ்டாக்ஸ் மினி ஈவோ சினிமா லான்ச்! செம ஸ்டைலிஷ் லுக்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.