சையோமி நிறுவனத்துக்குச் சொந்தமான ‘ஈ டெக்னாலஜி' வீட்டு கேமரா கம்பெனி, புத்தாண்டை முன்னிட்டு தனது தயாரிப்புகளை சலுகை விலையில் விற்பனைக்கு விட்டுள்ளது. கடந்த ஆண்டு ஈ டெக்னாலஜி நிறுவனத்தால் வீட்டு உபயோக கேமராக்கள், 2,990 ரூபாய்க்கு வெளியிடப்பட்டன. அது தற்போது அமேசான் இணைய வர்த்தக நிறுவனம் மூலம் 1,999 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த சலுகை வரும் ஜனவரி 26 ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே கேமரா ஃப்லிப்கார்ட் தளத்தில் 2,190 ரூபாய்க்கு கிடைக்கும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஈ டெக்னாலஜி, தனது நிறுவனத்தின் ‘ஈ ஆக்ஷன் கேமரா' மற்றும் ‘ஈ 4கே ஆக்ஷன் கேமரா' ஆகியவற்றின் விலைகளையும் தாறுமாறாக குறைத்துள்ளது. 4கே ஆக்ஷன் கேமராவன் விலை 17,990 ரூபாயிலிருந்து, 9,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆக்ஷன் கேமராவின் விலை 6,990 ரூபாயிலிருந்து 4,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள், பாதுகாப்புக்காக வீட்டில் பொருத்தி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. 720பி ரெசல்யூஷன் இதில் கிடைக்கப் பெறலாம். இரவு நேரங்களிலும் 3 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்கள் துள்ளியமாக தெரியும் வகையில் கேமராக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 111 டிகிரியில் நடக்கும் சம்பவங்களை கேமரா பதிவு செய்யும். ஈ ஹோம் செயலி மூலம், கேமராவின் செயல்பாடுகளை நேரடியாக பார்க்க முடியும். கேமராவில் மைக் இருப்பதால், இரண்டு எல்லைகளில் இருப்பவர்களும் பேசிக் கொள்ள முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்