நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Boat Airdopes ProGear.
Boat Airdopes ProGear ஆனது OWS என்ற வசதியுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது காதுளுக்கு வெளியில் மாட்டக்கூடிய வகையில் டிசைன் அருமையாக உள்ளது. வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்போன்கள் போல இல்லாமல் இன்-இயர் டிசைனுக்குப் பதிலாக, ஏர்டோப்ஸ் ப்ரோகியர் வடிவமைப்புடன் வருகிறது. காற்று சத்தம் தொந்தரவு செய்யாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இது இயற்கையில் ஒலி தெளிவாக கேட்க இயல்பான வழியாகும். இது பயனர்களுக்கு அதிவேக ஆடியோ அனுபவத்தை அளிக்கிறது. சார்ஜிங் கேஸ் உட்பட மொத்தம் 100 மணிநேரம் வரையிலான பேக்அப் வழங்குவதாக கூறப்படுகிறது.
Boat Airdopes ProGear இந்தியாவில் ரூ 1,699 மற்றும் ரூ. 1,999 விலையில் கிடைக்கிறது. Amazon, Myntra மற்றும் Boat India இ-ஸ்டோர் மூலம் வாங்கலாம் . Flipkartல் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளதை விட சிறப்பு விலையில்கிடைக்கிறது. இது தவிர ரிலையன்ஸ், குரோமா மற்றும் விஜய் சேல்ஸ் போன்ற ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த இயர்போன்கள் வாங்கலாம். இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. ஒன்று ஆக்டிவ் பிளாக், இன்னொன்று ஸ்போர்ட்டிங் கிரீன்.
Boat Airdopes ProGear ஆனது 15mm சவுண்ட் மற்றும் காற்று கடத்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இங்குதான் ஒலி காற்றில் பயணிக்கிறது. உச்ச அதிர்வுகளுடன் நமது செவிப்பறைகளுக்கு இனிமையாக அனுபவத்தை தருகிறது. இந்த இயர்போன்கள் காதுக்கு வெளியே இருக்கும். காது கொக்கிகளால் தாங்கப்படுகிறது. இவை எடை குறைந்ததாக உள்ளது. காது கொக்கிகள் தோலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்டு இருப்பதால் காதில் மாட்டி இருப்பதே தெரியாதது போல இருக்கும்.
Boat Airdopes ProGear OWS இயர்போன்கள் AI மூலம் சுற்றுச்சூழல் இரைச்சலை ரத்து (ENC) செய்து தெளிவாக இசை அனுபவத்தை தரும். குவாட் மைக் அமைப்பையும் கொண்டுள்ளது. இது தெளிவான செல்போன் அழைப்பு அனுபவத்தை வழங்குகிறது. 40ms என்ற அளவுக்கு குறைந்த லேட்டன்சி டெக்னாலஜி இருக்கிறது. இது கேமிங் அல்லது ஆன்லைனில் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் போது ஆடியோ-விஷுவல் இடையே உள்ள வேறுபாட்டை குறைத்து நமக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது.
Boat Airdopes ProGear இயர்பட்கள் ஒவ்வொன்றும் 65mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் சார்ஜிங் கேஸில் 500mAh செல் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. 10 நிமிடங்களை விரைவாக சார்ஜ் செய்தால், 10 மணிநேரம் வரை இயங்கும். இயர்பட்கள் IPX5 மதிப்பீட்டுடன் வருகின்றன. புளூடூத் 5.3 இணைப்பை சப்போர்ட் செய்கிறது.
நான்கு மைக்ரோஃபோன்கள் மற்றும் பின்னணி இரைச்சலைத் திறம்பட அகற்ற AI அல்காரிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜிம்மிங், ஜாகிங் அல்லது நீச்சல் குளத்தில் ஓய்வெடுப்பது போன்ற வெளிப்புற செயல்பாடுகளை விரும்புவோருக்கு நிறுவனம் இயர்போன்களுக்கு ஐபிஎக்ஸ் 5 சான்றிதழை வழங்கியுள்ளது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்