விளம்பரதாரர் உள்ளடக்கம்

'ரொம்ப நாள் எதிர்பார்த்தது வந்திடுச்சு!'- வாட்ஸ்அப்பின் 'வாவ்' அப்டேட்ஸ்

Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 18 ஆகஸ்ட் 2020 10:39 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் ஸ்டிக்கரை இனி செர்ச் செய்து தேர்வு செய்யலாம்
  • வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சம் தென்பட்டுள்ளது
  • 2018 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்பட்டது

கடந்த 2018 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அறிமுகமானது

வாட்ஸ்அப்பில் இனி ஸ்டிக்கரை எளிதாகத் தேடும் வகையிலான செர்ச் ஆப்ஷன் கொண்டு வரப்படுகிறது. 

வாட்ஸ்அப்பில் எமோஜிகளைப் போல் ஸ்டிக்கர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக  மூன்றாம் தரப்பு செயலி மூலம் வடிவேலு மீம்ஸ்கள், வடிவேலு எமோஜிகள் ஸ்டிக்கராக தமிழக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

இவ்வாறு ஸ்டிக்கர்களை அனுப்பும் போது ஒவ்வொரு முறையும் ஸ்டிக்கர்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து தான் அனுப்ப வேண்டியதாக உள்ளது. ஆனால் இனி அப்படி இருக்காது. ஸ்டிக்கரின் பெயரை செர்ச் செய்தாலே போதும், நமக்குத் தேவையான ஸ்டிக்கர் வந்து விடும். இப்படியான அம்சத்தை வாட்ஸ்அப் சோதித்து வருகிறது. 

வாட்ஸ்அப்பில் புதிதாக கொண்டு வரப்படும் அம்சங்கள் அனைத்தும் அதன் பீட்டா வெர்ஷனில் சோதிக்கப்படும். எனவே, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனைப் பார்த்தாலே அடுத்து வரவுள்ள அம்சங்களை தெரிந்துகொள்ள முடியும். 

அந்த வகையில், வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் தற்போது புதிதாக ஸ்டிக்கர் செர்ச் ஆப்ஷன் சோதிக்கப்பட்டு வருகிறது. இது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.198.5 பதிப்பில் தென்பட்டுள்ளது. இந்த அம்சம் எப்படி இருக்கும் என்பது குறித்த விவரங்களை, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் தகவல்களை வழங்கும் WABetaInfo தளம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மெசேஜ் அனுப்பும் போது ஸ்டிக்கர் பகுதியில் செர்ச் ஆப்ஷன் தென்படுகிறது. அதில் லவ், கிரிட்டிங்ஸ், ஹேப்பி, சோகம், கோபம், கொண்டாட்டம் என்று செர்ச் செய்தால், அதற்குரிய ஸ்டிக்கர்கள் மட்டும் தோன்றுகிறது. 

வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.20.198.5 பதிப்பில் தோன்றியுள்ள அம்சம்

கூடுதலாக ஸ்டிக்கர்கள் தேவைப்பட்டால் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது APK Mirror தளத்தில் இருந்து APK ஃபைலாக ஸ்டிக்கர்களைப் பெறலாம்.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp for Android, WhatsApp beta, WhatsApp
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Watch GT 6 Pro, GT 6: 21 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங் – இந்தியா விலை & அம்சங்கள்!
  2. OnePlus 15R, Pad Go 2 இந்திய அறிமுகம்: தேதி, அம்சங்கள் விவரம்!
  3. Oppo A6x: 6500mAh பேட்டரி, Dimensity 6300 – முழு விவரம்!
  4. 200MP கேமரா, 8000mAh பேட்டரி! HONOR 500 Pro-வில் Snapdragon 8 Elite – வெறித்தனமான அம்சங்களுடன் அறிமுகம்
  5. OnePlus ரசிகர்களே! உங்க 15R-ஆ இதுதான்! Snapdragon 8 Gen 5 சிப்செட்டோட புதிய Ace 6T போன்
  6. மொபைல்ல இல்ல, காருக்குள்ள ரே-டிரேசிங்! Dimensity P1 Ultra சிப்செட் – காருக்கான AI சக்தியை கொண்டுவந்த MediaTek
  7. 200MP, 7000mAh பேட்டரி... இனி சார்ஜ் பண்ற கவலையே இல்லை! Realme 16 Pro-வோட மிரட்டலான ஸ்பெக்ஸ் லீக்
  8. Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்
  9. 8000mAh பேட்டரி கொண்ட OnePlus போனா? Ace 6T மாடலின் அசத்தல் வண்ணங்கள் ரிலீஸுக்கு முன்னாடியே வெளியீடு
  10. Oppo K15 Turbo Pro: Snapdragon 8 Gen 5, 8000mAh பேட்டரி லீக்.
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.