ஒருவழியாக க்ரூப் அழைப்பு வசதியை வாட்சப் அறிமுகப்படுத்தி உள்ளது. அக்டோபரில் கண்டுபிடித்து கடந்த மே மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது உலகெங்கும் உள்ள வாட்சப் பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இவ்வசதி ஆண்டிராய்ட், iOS இயங்குதள மொபைல்களில் அறிமுகம் ஆகியுள்ளது. இதில் நான்கு பேர் வரை ஒரேநேரத்தில் பேசிக்கொள்ள முடியும். நாள் ஒன்றுக்கு வாட்சப் அழைப்புகளில் 2பில்லியன் நிமிடங்கள் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது இனி மேலும் அதிகரிக்கலாம்.
2016 முதலே வாட்சப்பில் வீடியோ கால் செய்யும் வசதி இருந்தாலும் க்ரூப் காலிங் வசதி இப்போதுதான் அறிமுகம் ஆகியுள்ளது. நெட்வொர்க் மெதுவாக உள்ள நிலையிலும் திறம்படச் செயலாற்றும் வகையில் இது வடிவமைப்பட்டுள்ளது. வாட்சப் அரட்டைகள் (சாட்) போலவே அழைப்புகளும் பாதுகாப்பாக மறையாக்கம் செய்யப்பட்டவை என்பதால் பயனர்களின் அந்தரங்கம் காக்கப்படும் என வாட்சப் தெரிவித்துள்ளது.
க்ரூப் கால் செய்வது எப்படி?
க்ரூப் கால் செய்ய முதலில் நமது தொடர்புகளில் உள்ள யாருக்கேனும் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்ய வேண்டும். அவர் நமது அழைப்பை ஏற்றவுடன், திரையில் மேல்-வலதில் 'add person' என்பதற்கான பட்டன் தெரியும். இதனை க்ளிக் செய்து மற்றொருவரை அழைப்பில் இணைக்கலாம். அவரும் அழைப்பை ஏற்றவுடன் மீண்டும் மேல்-வலதில் தெரியும் ஆப்சனை க்ளிக் செய்து மேலும் ஒருவரை இணைத்து இவ்வாறே நான்கு பேர் வரை ஒருநேரத்தில் உரையாடலாம்.
இவ்வசதியைப் பெற ஆண்டிராய்ட் & ஐபோன் பயனர்கள் முறையே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும் வாட்சப்பின் புதிய வெர்சனைப் பதிவிறக்கிக்கொள்ள வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்