வாட்ஸ்அப் குரூப் காலிங்கில் புது அப்டேட்! இனி அதிக நண்பர்களுடன் பேசலாம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 17 ஏப்ரல் 2020 12:53 IST
ஹைலைட்ஸ்
  • வாட்ஸ்அப் அனுமதிக்கும் பயனர்களின் சரியான எண்ணிக்கையில் தெளிவு இல்லை
  • புதிய குரூப் காலிங் வரம்பைப் பற்றிய சரங்களை சமீபத்திய பீட்டா காட்டுகிறது
  • சமூக விலகல் காரணமாக ஜூம் போன்ற செயலிகள் பிரபலமாகிவிட்டன

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வாட்ஸ்அப் குரூப் காலிங் மட்டுப்படுத்தப்பட்டதாக உணர்கின்றன

சமூக வலைதள செயலிகளில் ஒன்றான WhatsApp, தற்போது வரை நான்கு பயனர்களை மட்டுமே குரூப் காலிங்கில் அனுமதிக்கிறது. பயனர்களை அதிகரிக்கும் முயற்சியில் வாட்ஸ்அப் மும்முரமாக உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கின்றனர். இதனால், உறவினர்கள், நண்பர்களுடன் உரையாட ஜூம் மற்றும் கூகிள் டியோ போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்த செயலிகள், ஒரே நேரத்தில் 12 நபர்களுடன் வீடியோ காலிங்கில் இணைக்க அனுமதிக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு வாட்ஸ்அப்பும், அதிக நபர்களை சேர்ப்பதற்கான அம்சத்தில் தீவிரம் காட்டிவருகிறது. 

How to Make Group Calls With WhatsApp on Android, iPhone

இந்த அம்சம் முன்பு iOS-க்கான WhatsApp v2.20.50.23 பீட்டாவில் காணப்பட்டது. ஆண்ட்ராய்டுக்கான WhatsApp v2.20.128 பீட்டா மற்றும் WhatsApp v2.20.129 பீட்டாவில் கண்டுபிடித்த புதிய அம்சங்களை WABetaInfo பகிர்ந்துள்ளது. 

Advertisement

WhatsApp v2.20.128 பீட்டாவில் நீட்டிக்கப்பட்ட Group Call Limit-ஐக் குறிக்கும் சரங்கள் உள்ளன. WhatsApp v2.20.129 பீட்டாவில் புதிய Call Header-ஐக் கொண்டுவருகிறது. இது calls, end-to-end encryption உடன் பாதுகாக்கப்படுவதைத் தெரிவிக்கிறது. இந்த அம்சம் சில சிக்கல்களையும் கொண்டுவருகிறது என்று டிராக்கர் கூறுகிறது.

புதிய Call Header அம்சத்தை சேர்க்க வாட்ஸ்அப் செயல்படுகிறது
Photo Credit: WABetaInfo

குரூப் காலிங் பங்கேற்பாளர்கள் அனைவரும் புதிய பங்கேற்பாளர் வரம்பை அனுபவிக்க வாட்ஸ்அப்பின் அப்டேட் பதிப்பாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்சம் எப்போது வெளிவரும் என்பதில் எந்த தகவலும் இல்லை. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, WhatsApp for Android, WhatsApp Beta App, Group Call Limit, Call Header
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.