வாட்ஸ் ஆப் பிசினஸ் ஆப்பை இந்திய ஐ போன்களிலும் தரவிறக்கம் செய்யலாம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 5 ஏப்ரல் 2019 15:02 IST
ஹைலைட்ஸ்
  • தற்போது அதிகாரப்பூர்வமான 7 நாடுகளில் வாட்ஸ் ஆப் பிஸினஸ் வந்துள்ளது.
  • வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப் 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயன்பாட்டைத் தொடங்கியத
  • வணிகத்தைக் குறித்த சுயவிவரங்கள், முகவரி, மெயில் ஐடி,தகவல்களை கொடுக்க முட

உலகெங்கிலும் 5 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தக உரிமையாளர்கள் பிஸினஸ் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துகின்றனர்.

வாட்ஸ்ஆப்பின் பிஸினஸ் ஆப் தற்பொழுது இந்திய ஐபோனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப் கடந்த மாதம் முதல் ஆப் ஸ்டோர்க்கு வந்துள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமான 7 நாடுகளில்  வாட்ஸ் ஆப் பிஸினஸ் வந்துள்ளது. இந்தியா, பிரேசில், ஜெர்மனி, மெக்ஸிகோ, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளில் உள்ளது.

ஆண்ட்ராய்டு போனுக்கான வெர்ஸன் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது. வாட்ஸ் ஆப்பின் பிஸினஸ் ஆப் சிறு தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ள உதவிகரமாக இருக்கும்.

வாட்ஸ் ஆப் நிறுவனம் வரவிருக்கும் வாரங்களில் ஆப் ஸ்டோர் மூலமாக இலவசமாக வாட்ஸ் ஆப் பிசினஸ் ஆப்பை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனக் கூறியுள்ளது. வாட்ஸ் ஆப் பிசினஸ் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மெக்ஸிக்கோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து தரவிறக்கம் செய்யத் தொடங்க அனுமதிக்கப்பட்டது. 

வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப்  2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயன்பாட்டைத் தொடங்கியது. இந்த பிஸினஸ் வாட்ஸ் ஆப் வணிகத்தைக் குறித்த சுயவிவரங்கள், கடையின் முகவரி, மெயில் ஐடி, இருக்குமிடம் ஆகிய தகவல்களை வைத்திருக்க முடியும்.

வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பல வசதிகளை எளிதாக்கியுள்ளது. வாழ்த்துக்கள், செய்திகள் ஆகியவற்றை எளிதாக பலருக்கும் அனுப்ப முடியும். வாட்ஸ் ஆப் பிஸினஸ் ஆப்பையும் இணையத்திலும் பயன்படுத்த முடியும். உலகெங்கிலும் 5 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தக உரிமையாளர்கள் பிஸினஸ் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துகின்றனர். 


We discussed what WhatsApp absolutely needs to do in 2019, on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp Business, iPhone, Apple, App Store, India, WhatsApp

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Lava Bold 2 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு; Under-Display Fingerprint Scanner உறுதி
  2. iQOO Z11 165Hz டிஸ்ப்ளே, 9,020mAh பேட்டரியுடன் டீஸ்; சீனாவில் விரைவில் அறிமுகம்
  3. SanDisk Extreme Fit USB Type‑C Flash Drive இந்தியாவில் அறிமுகமானது.. அசத்தும் அம்சங்கள்
  4. Samsung Galaxy M17e 5G: 50MP கேமரா, 6,000mAh பேட்டரியுடன் மார்ச் 17ல் இந்தியாவில் அறிமுகம்
  5. OnePlus 15T வடிவமைப்பு மற்றும் நிறங்கள் சீனா வெளியீட்டுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியீடு
  6. Oppo Find N6 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மார்ச் 17 அன்று சீனாவில் அறிமுகம்; கான்பிகரேஷன் மற்றும் நிறங்கள் உறுதி
  7. MacBook Neo vs MacBook Air (2026) ஒப்பீடு: இந்திய விலை, அம்சங்கள் மற்றும் பல
  8. DoT-இன் SIM Binding விதி என்ன? – மெசேஜிங் ஆப்ஸ் மற்றும் பயனர்களுக்கு இதன் தாக்கம்
  9. Poco C85x 5G இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.. பல சுவாரஷ்ய அம்சங்களுடன்
  10. Samsung Galaxy A37 5G மற்றும் Galaxy A57 5G விவரங்கள் வெளியீட்டுக்கு முன்பே வெளியான தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.