டிக்டாக்கில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் உடன் பேச்சுவார்த்தை!

விளம்பரம்
Written by Reuters மேம்படுத்தப்பட்டது: 13 ஆகஸ்ட் 2020 16:52 IST
ஹைலைட்ஸ்
  • The two companies began conversations late last month
  • Reliance, ByteDance, and TikTok did not immediately comment
  • The Indian government in June banned 59 Chinese apps, including TikTok

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் டிக்டாக் தடை செய்யப்பட்டது

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம், இந்தியாவில் தனது டிக்டாக் வணிகத்தில் முதலீடு செய்யும்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன.  

இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், டிக்டாக்கின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) மீண்டும் இந்தியாவில் காலூன்ற முயற்சித்து வருகிறது. 

அந்த வகையில், கடந்த மாதம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பைட்டான்ஸ் நிறுவனம் ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. ஆனால், அப்போது எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், தற்போது டிக்டாக்கின் வணிகத்தில் முதலீடு செய்வதற்காக ரிலைன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன.  இந்த செய்திக்கு ரிலையன்ஸ் தரப்பிலும், டிக்டாக் தரப்பிலும் எந்த மறுப்பும் வரவில்லை. 

சீனாவுடனான எல்லை  பிரச்னை பதட்டங்களுக்குப் பின்னர் , "இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்" அச்சுறுத்தியதற்காக இந்திய அரசாங்கம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன  செயலிகளை ஜூன் மாதம் தடை செய்தது.

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவை தளமாகக் கொண்ட மெசேஜிங் ஆப், வீ சாட் மற்றும் டிக்டாக் ஆகியவற்றுக்கு தடை விதிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தத் தடை45 நாளில் அமலாகிறது.  

இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனமும், டுவிட்டர் நிறுவனமும் டிக்டாக்கை வாங்குவதற்கு முயற்சி செய்து வருகிறது. தற்போது ரிலையன்ஸ் நிறுவனமும் இந்த முயற்சியில் இருப்பதாக தெரிகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: TikTok, Reliance, Microsoft, ByteDance, Twitter, TikTok Ban
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. OnePlus N6 விமர்சனம்: பல ஆண்டுகளில் ஒன்பிளஸின் மிகவும் கவனமாக உருவாக்கப்பட்ட போன்
  2. Oppo Reno 16: சீன மாடலைப் போலன்றி, இந்தியாவில் ஸ்னாப்டிராகன் சிப்சேட்டுடன் அறிமுகம் உறுதி
  3. iQOO Pad 5c அறிமுகம்: 10,000mAh பேட்டரி, 12.1-இன்ச் 2.8K டிஸ்ப்ளே - விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  4. Uber இந்தியாவில் 'Record My Ride', 'Ambulance Assistance' எனப் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்
  5. ஜிமெயில் மற்றும் கூகுள் கீப் -இல் புதிய உரையாடல் குரல் அம்சங்களை கூகுள் சோதிக்கத் தொடங்குகிறது
  6. ஒப்போ என்கோ ஏர் 5 ப்ரோ (Oppo Enco Air 5 Pro) விமர்சனம்: சமரசமற்ற தரம், முழுமையான மதிப்பு
  7. ஒன்பிளஸ் என்6 இந்தியாவில் அறிமுகம்: 8,000mAh பேட்டரி, டைமென்சிட்டி 6360 சிப்செட் மற்றும் விலையில் வெளியீடு!
  8. சாம்சங் கேலக்ஸி A27 5G இந்தியாவில் வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி சலுகை விவரங்கள்
  9. வாட்ஸ்அப் யூசர்நேம் அம்சம்: இது என்ன, எப்படிச் செயல்படுகிறது, ஏன் முக்கியம்?
  10. அமேசான் பிரைம் டே விற்பனை: ஒன்பிளஸ் 15, பேட் 4, நோர்ட் பட்ஸ் 4 உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.