WhatsApp-ல் Fingerprint Lock செட் செய்வது எப்படி..? - தெரிஞ்சுக்கோங்க!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 6 நவம்பர் 2019 11:16 IST
ஹைலைட்ஸ்
  • Fingerprint lock-ஐ, இனி Android போன்களில் பயன்படுத்தலாம்
  • ஆகஸ்ட் மாதம் ஆண்ட்ராய்டு போன்களுக்கு இவ்வசதி வந்தது
  • வாட்ஸ்அப்பின் 2.19.221 வெர்ஷனில் இது உள்ளது

Fingerprint Lock on WhatsApp - நோட்டிஃபிகேஷனில் என்ன மெஸேஜ் வருகிறது மற்றும் யார் அனுப்பினார்கள் என்பதைப் பார்க்கலாமா வேண்டாமா என்பதையும் முடிவு செய்ய வழிவகை உள்ளது. 

கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம், தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வகை வெர்ஷன்களுக்குப் பல்வேறு மெர்சல் அப்டேட்களை வெளியிட்டு வந்தது. அதில் ஒன்றில்தான், ஃபிங்கர் பிரின்ட் லாக் (Fingerprint Lock) செய்ய முடியும் என்கிற வசதி வந்தது. இதன் மூலம் வாட்ஸ்அப் செயலியை உங்களால் லாக் செய்து வைக்க முடியும். அதே நேரத்தில் இந்த அப்டேட் சரியாக வேலை செய்ய, உங்கள் ஸ்மார்ட் போனில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் (Fingerprint Sensor) இருக்க வேண்டும். இந்த செய்திக் கட்டுரை மூலம், வாட்ஸ்அப் செயலியில் எப்படி ஃபிங்கர் பிரின்ட் லாக்-ஐ உள்ளிடுவது என்பதை விளக்குவோம். 

இந்த ஃபிங்கர் பிரின்ட் லாக் வசதி, ஆண்ட்ராய்டு வகை வாட்ஸ்அப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஆப்பிள் போன்களுக்கு கடந்த பிப்ரவரி மாதமே இது நடைமுறைபடுத்தப்பட்டது. 

Advertisement

ஆண்ட்ராய்டு போன்களில் எப்படி இந்த Fingerprint Lock-ஐ பயன்படுத்துவது:

நீங்கள் ஆரம்பிக்கும் முன்னர் வாட்ஸ்அப்பின் 2.19.221 வெர்ஷன், உங்கள் போனில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். அதை முடித்தப் பின்னர் இந்த வழிமுறையை பின்பற்றவும். 

1.வாட்ஸ்அப்-ஐ திறக்கவும் > மேல் வலது பக்கம் உள்ள 3 புள்ளிகள் இருக்கும் இடத்தை சொடுக்கவும். பின்னர் Settings-க்குள் நுழையவும்.

Advertisement

2.அதைத் தொடர்ந்து Account > Privacy > Fingerprint Lock என்ற வரிசையில் செல்லவும்.

3.இதைத் தொடர்ந்து வரும் திரையில் Unlock with Fingerprint என்கின்ற ஆப்ஷனை ஆன் செய்யவும்.

4.எவ்வளவு நேரத்திற்குப் பின்னர் ஃபிங்கர் பிரின்ட் பயன்படுத்தி வாட்ஸ்அப்-ஐ திறப்பது என்பதையும் செட் செய்ய முடியும். அதில் Immediately, After a minute அல்லது After 30 minutes என்கின்ற 3 ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். 

Advertisement

5.இதைத் தவிர்த்து, நோட்டிஃபிகேஷனில் என்ன மெஸேஜ் வருகிறது மற்றும் யார் அனுப்பினார்கள் என்பதைப் பார்க்கலாமா வேண்டாமா என்பதையும் முடிவு செய்ய வழிவகை உள்ளது. 

இனி, ஃபிங்கர் பிரின்ட் பயன்படுத்தியே உங்கள் வாட்ஸ்அப்-ஐ திறக்கலாம்.


 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp, Android, Google Play Store
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.