Photo Credit: Instagram
உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான ஒரு சமூக ஊடக தளமாக Instagram உள்ளது. குறிப்பாக இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இது அதிகப்படியான யூசர்களைக் கொண்டிருப்பதில் இருந்து அதன் பிரபலத்தை நம்மால் அறிய முடிகிறது. யூசர்கள் தங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை உருவாக்கி அதில் பதிவிடுகிறார்கள்.
இன்ஸ்டாகிராம் பயனர்கள் நீண்ட காலம் எதிர்கொண்ட எரிச்சலூட்டும் அம்சத்தை நீக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Automatic Feed Refresh ஆகும் “rug pull” வசதியை இனி நீக்கப்போகிறது Instagram. இனி சிறிது நேரம் செயலற்ற நிலைக்குப் பிறகு மூடப்பட்ட Instagram ஆப் திறக்கப்படும்போது சமூக ஊடகத் தளத்தின் Feed தானாகவே புதுப்பிக்கப்படாது. இதனால் பயனர்கள் தங்கள் திரையில் முதலில் தோன்றும் பதிவுகளை தொடர்ந்து பார்க்க முடியும். ஏற்கனவே உள்ள அம்சம் அதிக எண்ணிக்கையிலான பயனர்களால் பார்க்கப்படும் வீடியோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதிக பார்வைகளைப் பெறாத இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் ரீல்களின் தரத்தை வேண்டுமென்றே குறைக்கிறது என்பதை நிறுவனம் உறுதிப்படுத்திய பின்னர் இந்த மாற்றம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Ask Me Anything (AMA) என்கிற நிகழ்வின் போது சமூக ஊடக தளத்தில் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொஸ்ஸேரியிடம் மக்கள் அறியாத சமீபத்திய மாற்றம் குறித்து கேட்கப்பட்டது. இன்ஸ்டாகிராம் “rug pull” என்று அழைக்கப்படும் அம்சத்தை நிறுத்திவிட்டதாக ஆடம் மொஸ்ஸேரி தெரிவித்தார். இது ஒரு பயனர் இடைமுக (UI) அம்சமாகும். இதன் விளைவாக பயனர் ஆப்களை நீண்ட நேரம் மூடி வைத்து மீண்டும் திறக்கும் போது அதில் உள்ள அணுகும்போது Feed தானாகவே புதுப்பிக்கப்படும்.
மொசெரியின் கூற்றுப்படி, ஆப்களை திறந்ததும் பதிவுகளை பயனர்களுக்கு காட்டவும், கடைசியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்களைக் காட்டவும் இந்த மாற்றம் செய்யப்பட்டது. இந்த அம்சம் பயனர் ஈடுபாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், திரையில் முதலில் தோன்றிய எந்தவொரு சுவாரஸ்யமான பதிவுகளும் நகர்ந்து மறைந்துவிட்டதால், அதை "எரிச்சலாக" இருப்பதாக நிறுவன அதிகாரி ஒப்புக்கொண்டார். பயனர்கள் ஏற்கனவே பார்த்த பதிவுகளை காண கீழே ஸ்குரோல் செய்யும்படி மொஸ்ஸேரி கேட்டுக்கொண்டார்.
Instagram சமூக ஊடக தளத்தில் மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் இனி பதிவுகள் மறைந்து போகும் சம்பவங்கள் நடக்காது என மோசேரி உறுதிப்படுத்தியுள்ளார். ஊட்டத்தை தானாகவே புதுப்பிப்பதற்குப் பதிலாக, Instagram இப்போது தொடர்ந்து பதிவுகளை காட்டும். பயனர் ஸ்குரோல் செய்யும் வரை வரை அதைக் காண்பிக்காது. பின்னர், புதிதாக ஏற்றப்பட்ட பதிவுகள் ஏற்கனவே காட்டப்படும் பதிவுகளுக்கு கீழே வரும். இது சராசரி பயனருக்கு "மிகச் சிறந்த அனுபவத்தை" வழங்குகிறது. இது தவிர தற்போதைய அறிக்கைகளின்படி, இன்ஸ்டாகிராமில் வீடியோக்களின் தரம் இப்போது குறையக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமின் இந்த நடைமுறையானது பிரபலமான கிரியேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பல யூசர்கள் கவலை தெரிவித்தனர். பிரபலமான கிரியேட்டர்களுக்கு வழங்கப்படும் உயர்தர வீடியோக்கள், அவர்களின் பிரபலத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும், மற்றவர்கள் வியூஸ் மற்றும் லைக்ஸ்களை பெறுவது கடினம் என தெரிவித்துள்ளனர்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்