கொரோனா வைரஸை டிராக் செய்ய 'ஆரோக்ய சேது' செயலி அறிமுகம்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 2 ஏப்ரல் 2020 15:21 IST
ஹைலைட்ஸ்
  • ஆரோக்யா சேது செயல்படுவதற்கு இருப்பிடம், புளூடூத் அணுகலை பயன்படுத்துகிறத
  • பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்யலாம்
  • ஆரோக்யா சேது ஒரு விரிவான தனியுரிமைக் கொள்கையைக் கொண்டுள்ளது

ஆரோக்ய சேது தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டது

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் விதமாக இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து வருகிறது. அவற்றின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக இந்திய அரசு தனது கோவிட்-19 டிராக்கர் செயலியான 'ஆரோக்ய சேது'-வை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த செயலி, பயனர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா?, வைரஸ் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தார்களா? என்பதை அடையாளம் காண உதவுகிறது. மேலும், வைரஸ் பற்றிய ஆலோசனைகள் பற்றி மக்களுக்கு "முன்கூட்டியே" தெரிவிக்கும் முயற்சிகளை "அதிகரிப்பதை" நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆரோக்ய சேது செயலி, தேசிய தகவல் மையத்தால் உருவாக்கப்பட்டது. 

முன்னதாக, கடந்த வாரம் CoWin-20 என பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ்-டிராக்கர் செயலியை, நிதி ஆயோக் உருவாக்கியது. அதை தொடந்து, மாநில மற்றும் மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொடர்பான செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.


செயலியின் பயன்பாடு:

இந்த வைரஸ் டிராக்கர் செயலியை, இந்தி, ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் பயன்படுத்தலாம். 
ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்த புளூடூத் மற்றும் இருப்பிட அணுகல் தேவை. 
செயலியை பயன்படுத்த, பயனர்கள் முதலில் தங்கள் மொபைல் எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும். 
செயலியின் Privacy Policy பற்றி கவலைப்படுபவர்களுக்கு, இது சேமிக்கப்பட்ட டேட்டா "encrypted" என்று அரசு கூறுகிறது.

ஆரோக்யா சேது செயலியில் Privacy Policy உள்ளது

செயலியின் சிறப்பம்சங்கள்:

ஆரோக்ய சேது செயலி, பயனர்களின் இருப்பிடத்தின் அடிப்படையில், பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்களா இல்லையா என்பதை சொல்கிறது. 
செயலியின் ஆண்ட்ராய்டு பயனர்கள், சுகாதார அமைச்சகத்தின் லைவ் ட்வீட்களையும் பார்க்கலாம். 
செயலி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பற்றிய ஆலோசனைகளை வழங்கும். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.