அடேங்கப்பா இப்படியொரு விஷயமா..? - 'வாவ்' அப்டேட் மூலம் கலக்கும் WhatsApp!

அடேங்கப்பா இப்படியொரு விஷயமா..? - 'வாவ்' அப்டேட் மூலம் கலக்கும் WhatsApp!

Photo Credit: WABetaInfo

ஹைலைட்ஸ்
  • WhatsApp 'disappearing messages' அம்சத்தை சோதித்து வருகிறது
  • ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு எல்லா செய்திகளும் தானாகவே நீக்கப்படும்
  • "Disappearing messages" என்ற ஆப்ஷனை enable செய்ய வேண்டும்
விளம்பரம்

Disappearing Messages-களை அனுப்பும் திறனை அதன் பயனர்களுக்கு வழங்க வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை சோதித்து வருகிறது. இந்த செய்திகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு Self-Destructing-ஐ ஏற்படுத்தும். இந்த அம்சத்தின் தடயங்கள் அண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பின் சமீபத்தில் வெளியிடப்பட்ட பொது பீட்டா பதிப்பில் காணப்பட்டன. இது v2.19.275 என அழைக்கப்படுகிறது. இது தற்போது வளர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பீட்டா பதிப்பின் ஒரு பகுதியாக கூட பொது பயன்பாட்டிற்கு கிடைக்கவில்லை.


அறியப்பட்டபடி, பேஸ்புக்கிற்குச் சொந்தமான தளம் WhatsApp tipster, WABetaInfo ஆகியவை இந்த அம்சத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் இது எதிர்கால வாட்ஸ்அப் அப்டேட்டின் ஒரு பகுதியாக “bug-free” என்று வெளியிடப்படும்.


"பெயர் குறிப்பிடுவது போல, 'disappeared' செய்யும் எந்த செய்தியும் Chat-ல் இருந்து தானாகவே நீக்கப்படும்!" என்கிறது வலைத்தளம்.

Chat-ல் "மறைந்துவிட்டது" என்று குறிக்கப்பட்டால், ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு எல்லா செய்திகளும் தானாகவே நீக்கப்படும்.

Group Info-வில், 'disappeared' என்ற விருப்பத்தை பயனர்கள் செயல்படுத்த "Disappearing messages" என்ற ஆப்ஷனை enable செய்ய வேண்டும்.

இது highly-encrypted chat தளமான டெலிகிராமில் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும்.

Disappearing Messages என்ற அம்சம் வாட்ஸ்அப்பில் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் status Stories-களை பேஸ்புக் ஸ்டோரி மற்றும் பிற பயன்பாடுகளில் நேரடியாகப் பகிர ஒரு அம்சத்தை வாட்ஸ்அப் கடந்த மாதம் வெளியிட்டது. இன்ஸ்டாகிராமைப் போலவே, வாட்ஸ்அப்பின் status Stories பயனர்கள் படங்கள், டெக்ஸ்ட் மற்றும் வீடியோக்கள்24 மணி நேரத்திற்குப் பிறகு disappear ஆகிவிடும்.

வாட்ஸ்அப் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை, ஆனால் பல பயனர்கள் இதை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: WhatsApp
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »