OnePlus டிவிக்கு அடேங்கப்பா Exchange Offer - முழுசா தெரிஞ்சுக்கோங்க!

OnePlus டிவிக்கு அடேங்கப்பா Exchange Offer - முழுசா தெரிஞ்சுக்கோங்க!

OnePlus TV Q1-ன் விலை ரூ. 69,900

ஹைலைட்ஸ்
  • TV-களுக்கு 2 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது Amazon
  • Amazon Pay மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.2000 உடனடி தள்ளுபடி
  • ஒன்பிளஸ் டிவி வாங்குவோர் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கை ரூ. 2,399 வாங்கலாம்
விளம்பரம்

OnePlus தனது OnePlus TV Q1 மற்றும் OnePlus TV Q1 Pro தொலைக்காட்சிகளுக்கான அமேசான் இந்தியாவில் பல சலுகைகளை பட்டியலிட்டுள்ளது. சலுகைகளில் no-cost EMI விருப்பங்கள், எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் ஆகியவை அடங்கும். இ-காமர்ஸ் தளத்தில் அக்டோபர் 17 வரை மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும் என்று நிறுவனம் கூறுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சலுகைகளில், எக்ஸ்சேஞ் தள்ளுபடிக்கு ரூ. 15,400 மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளில் 3,500 ரூபாய் உடனடி தள்ளுபடியாக கிடைக்கும். நினைவுகூர, OnePlus TV Q1 சீரிஸ் கடந்த மாதம் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலுக்கு சற்று முன்னதாக இந்தியாவில் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் OnePlus TV Q1 மற்றும் OnePlus TV Q1 Pro-வின் விலை

இந்தியாவில், OnePlus TV Q1-ன் விலை ரூ. 69,900 மற்றும் OnePlus TV Q1 Pro-வின் விலை ரூ. 99.900-யாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்மார்ட் டிவிகள் அமேசான் இந்தியாவில் மட்டுமே விற்கப்படுகின்றன. மேலும் புதிய சலுகைகளில் 24 மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷன்கள், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கினால் ரூ. 3,500 உடனடி தள்ளுபடியும், அமேசான் பேவைப் பயன்படுத்துவோருக்கு ரூ. 2,000 உடனடி கேஷ்பேக் மற்றும் இரண்டு வருட உத்தரவாதமும் அடங்கும்.

இ-காமர்ஸ் நிறுவனமான பழைய டிவி அலகுகளின் எக்ஸ்சேஜிற்கு கூடுதலாக ரூ. 10,000 தள்ளுபடியை வழங்குகிறது. கூடுதலாக, தீபாவளி டிவி ஃபயர் ஸ்டிக் சலுகையின் ஒரு பகுதியாக, ஒன்பிளஸ் டிவி வாங்குவோர் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கை அதன் அசல் விலையான ரூ. 3,999-யிலிருந்து வெறும் ரூ. 2,399-க்கு வாங்கலாம். அதேபோல், Echo Dot-ன் விலை ரூ. 1,999 மட்டுமே.

OnePlus TV Q1 மற்றும் OnePlus TV Q1 Pro, Android TV 9.0-யால் இயங்குகிறது. இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் 55-inch 4K QLED display, carbon fibre-like finish மற்றும் 50W sound output-ஐக் கொண்டுள்ளன. டி.வி.கள் பின்புறத்தில் carbon fibre-like finish மற்றும் தனித்துவமான ஸ்டாண்ட் டிசைனுடன் வருகின்றன. குறிப்பாக, ஒன்பிளஸின் புரோ மாடலுக்கு மட்டுமே table-top stand-ஐ வழங்குகிறது. OnePlus TV Q1 வாங்குபவர்கள் இந்த ஸ்டாண்டை தனித்தனியாக ரூ. 2,990-க்கு வாங்க வேண்டும். அதிக விலை கொண்ட யூனிட்டில் built-in motorised soundbar இருப்பதுதான், OnePlus TV Q1 மற்றும் OnePlus TV Q1 Pro ஆகியவற்றுக்கு இடையேயான ஒரே வித்தியாசம்.
 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Performance
  • Value for Money
  • Software
  • Features
  • Good
  • Looks good
  • Motorised soundbar is a nice touch
  • The panel can get really bright
  • Possible to get good performance with HDR, 4K, and full-HD content
  • Excellent sound quality
  • Bad
  • Buggy software and app; no Netflix for now
  • Remote is too minimalist; no mute/ source buttons
  • Need a lot of tweaking to get the best performance
  • Issues with HDR10 overexposure
  • Lots of artefacts visible in scenes with rapid motion
  • Below-average picture quality with SD content
Display 55.00-inch
Screen Type QLED
Dimensions 1223.7 x 707 x 61.3mm
OS Android Based
Smart TV Yes
Resolution Standard 4K
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »