Asus மடிக்கணிகள் இந்தியாவில் அறிமுகம்!

Asus மடிக்கணிகள் இந்தியாவில் அறிமுகம்!

Asus ZenBook Pro Duo UX581

ஹைலைட்ஸ்
  • Asus ZenBook Pro Duo-வின் விலை ரூ. 2,09,990 முதல் ஆரம்பம்
  • full-width 4K Asus ScreenPad Plus அம்சத்தைக் கொண்டது ZenBook Pro Duo
  • Asus, Intel 10th Gen Core processors புதுபிப்பைக் கொண்டுவந்துள்ளது
விளம்பரம்

Asus கடந்த வியாழக்கிழமையன்று இந்தியாவில் தனது dual-screen laptop series வெளியிட்டது. இதில் ZenBook Pro Duo (UX581) மற்றும் ZenBook Duo (UX481) ஆகியவை ஆரம்ப விலையாக ரூ. 2,09,990 மற்றும் ரூ. 89,990-யாக உள்ளது. 

நிறுவனம் தனது Intel 10th Gen Core processors உடன் புதுபிக்கப்பட்ட ZenBook வரிசையில் - ZenBook 13 (UX334)-வின் விலை ரூ. 84,990, ZenBook 14 (UX434)-வின் விலை ரூ. 84,990 மற்றும் ZenBook 15 (UX534)-வின் விலை ரூ. 1,24,990 ஆகும். VivoBook S431-ன் விலை ரூ. 54,990 மற்றும் VivoBook S532-ன் விலை ரூ. 69,990-யாக Asus வெளியிட்டது.

ZenBook Pro Duo மற்றும் ZenBook Duo-வுடன், மடிக்கணினிகளுக்கான new form factor-க்கு வழி வகுத்துள்ளதாகவும், keyboard மற்றும் input-ற்காக secondary touchscreen ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது என்றும் நிறுவனம் கூறுகிறது. 

asus zenbook full Asus ZenBook Pro Duo UX581

ZenBook Pro Duo (Intel Core i9-9980HK processor, GeForce GTX 2060 வரை) முழு full-width 4K Asus ScreenPad Plus அம்சத்தைக் கொண்டுள்ளது. 4K UHD OLED டிஸ்பிளேவுடன் தடையின்றி செயல்படுகிறது. 

ZenBook Duo (Intel Core i7-10510U processor, GeForce MX250) full-length 1920p AsusScreenPad Plus அம்சத்தைக் கொண்டுள்ளது. இது பிரதான 1080p FHD LCD டிஸ்ப்ளேவுடன் செயல்படுகிறது. 

ZenBook Pro Duo, four-sided frameless வடிவமைப்பு மற்றும் ultra-slim bezels உடன் 4K UHD NanoEdge OLED HDR டிஸ்பிளேவை வழங்குகிறது. cinema-grade 100 percent DCI-P3 colour gamut மற்றும் 100,000:1 மாறுபட்ட விகிதத்தைக் OLED touchscreen கொண்டுள்ளது. screen-to-body விகிதம் 89 சதவிகிதமாகும். 

ZenBook Duo-வில் 1080p FHD NanoEdge டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், four-sided frameless வடிவமைப்புடன் 90 சதவிகிதம் ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது. 
 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: ZenBook Pro Duo, ZenBook Duo, Asus
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »