இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் இன்று அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஷாவ்மி நிறுவனம் புதிதாக கலக்கலான டிஸ்பிளேவுடன் கூடிய சூப்பரான ஸ்மாடர் பேண்ட் அறிமுகம் செய்துள்ளது. மற்ற ஸ்மார்ட் பேண்டைப் போலவே இதிலும் இதய துடிப்பு கண்காணிப்பு, ஸ்லீப் டிராக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இது சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் விலை:
இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் பேண்டின் விலை 1,599 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி புதனன்று மதியம் 1 மணியளவில் விற்பனைக்கு வருகிறது. இதனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் mi.com ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஆஃப்லைன் கடைகளிலும், எம்ஐ ஷோரூம்களிலும் கிடைக்கிறது.
ரெட்மி ஸ்மார்ட் பேணடில் 1.08 இனச் அளவிலான கலர் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. எம்ஐ பேண்ட் 4 டிஸ்பிளே விட இதில் உள்ள திரை சற்று பெரிதாகவே உள்ளது. 24 மணி நேரமும் இதயத்துடிப்பை கண்காணிக்கிறது. ஐந்து விதமான ஸ்போர்ட் மோடுகள் உள்ளது.
வாட்டர் ரெசிஸ்டெண்ட் இருப்பதால், தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது. நீச்சல் அடிக்கும் போதும் பயன்படுத்தலாம். 50 மீட்டர் ஆழமுள்ள நீரில் சுமார் 10 நிமிடங்கள் வரையில் எந்தபாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
பயனர்களுக்கு வரும் மெசேஜ்களை எந்த பட்டனையும் அழுத்தாமலே, திரையைத் தொடாமலே படிக்க முடியும். இந்த ஸ்மார்ட் பேண்டை ஒரு முறை சார்ஜ் ஏற்றினாலே சுமார் 20 நாட்கள் வரையில் நீடித்து உழைக்கும்.
Which are the best truly wireless earphones under Rs. 10,000? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்