சியோமி நிறுவனம், Mi-யின் 'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போன்களை வருகின்ற ஜூலை 15 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது. அமேசான் மற்றும் Mi.com தளங்களில் விற்பனைக்கு வரும் எனவும் கூறியுள்ளது. சியோமியின் ஐந்தாவது பிறந்தநாள் கொண்டாட்ட சலுகைகளாக Mi.com தளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலில் இந்த ஹெட்போனும் இடம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி புதிதாக குறிப்பிடும்படி ரீ-சார்ஜ் செய்துகொள்ளும் வகையிலான LED விளக்குகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
சியோமி நிறுவனம், தனது டிவிட்டர் பக்கத்திலும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த ஹெட்போன், இந்தியாவில் ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும். அன்று நள்ளிரவு 12 மணிக்கே இந்த ஹெட்போன் விற்பனைக்கு வரும் எனவும் குறிப்பிட்டிருந்தது. மேலும் இந்த ஹெட்போன் குறித்து கூறுகையில், இது 20 மணி நேரம் நீடிக்கும் பேட்டரியை கொண்டுள்ளது. 40mm டைனமிக் டிரைவர்களையும் கொண்டுள்ளது. இன்னும், இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விலை மற்றும் மற்ற தகவல்கள் இதன் அறிமுகத்தின்போது வெளியிடப்படும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த தளத்தில் வேப்பத்திற்கு ஏற்ப மூன்று வண்ணங்களை வெளிப்படுத்தும், ரீ-சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய LED விளக்குகள், அதிவேக சார்ஜர், இயர்போன்கள் என பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அதிவேக சார்ஜர், சமீபத்தில் சீனாவில் வெளியான 36W மற்றும் 27W சார்ஜர்களில் ஏதோ ஒன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்த ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஜூலை 15-ல் பல பொருட்கள் அறிமுகமாகும் என சியோமி நிறுவனம் கூறியிருந்தது. அதுமட்டுமின்றி ஜூலை 17-ல் புது டெல்லியில் ஒரு கொண்டாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்