ரியல்மியின் இரண்டு புதிய சாதனங்கள் விரைவில் அறிமுகம்! - மாதவ் ஷெத் 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 26 மார்ச் 2020 13:56 IST
ஹைலைட்ஸ்
  • ரியல்மி 6 புரோ ஒயிட் கலர் ஆப்ஷனும் வீடியோவில் காணப்பட்டது
  • ஏப்ரல் மாதத்தில் முன் கேமரா மெதுவான இயக்கம், யுஐஎஸ் அம்சங்களைப் பெறும்
  • நிறுவனம் ரியல்மி ப்ளூடூத் ஸ்பீக்கர்களிலும் பணியாற்றி வருகிறது

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் ஒரு வீடியோவில், ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் அணிந்திருப்பதைக் காணலாம்

Photo Credit: YouTube/ Realme India

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் யூடியூபில் சமீபத்திய #AskMadhav எபிசோடில் வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்வாட்சின் முதல் தோற்றத்தை வழங்கினார். இந்த ஸ்மார்ட்வாட்ச் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஷெத் குறிப்பிட்டார். ரியல்மி ஸ்மார்ட்வாட்சில் சதுர வடிவ டயல் மற்றும் கருப்பு பட்டை உள்ளது. ரியல்மி 6 ப்ரோவின் ஊதா வேரியண்ட் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாகவும், ரியல்மி ப்ளூடூத் ஸ்பீக்கர்களை சந்தைக்குக் கொண்டுவருவதற்கும் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் ஷெத் உறுதிப்படுத்தினார்.

#AskMadhav எபிசோட் வீடியோவில், ஷெத், வரவிருக்கும் ரியல்மி ஸ்மார்ட்வாட்சை அணிந்திருப்பதைக் காணலாம். ஆனால், ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்மார்ட்வாட்ச் குறித்து எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தனித்தனியாக, ரியல்மி 6 ப்ரோ ஒரு லைட்னிங் ஊதா கலர் ஆப்ஷனில் மிக விரைவில் வரும் என்று நிர்வாகி வெளிப்படுத்தினார். இந்த புதிய வீடியோவில் ஒரு வெள்ளை கலர் ஆப்ஷனும் காணப்படுகிறது. மேலும், இது எதிர்காலத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

முன் கேமரா ஸ்லோ மோஷன் மற்றும் யுஐஎஸ் போன்ற Realme 6 Pro-வின் பிரத்யேக அம்சங்களும் ஏப்ரல் மாதத்தில் Realme 6 பயனர்களுக்காக வெளிவருவது உறுதி. இருப்பினும், நைட்ஸ்கேப் 3.0 மற்றும் ட்ரைப்பாட் மோட் தற்போதுள்ள எந்த ரியல்மி போன்களுக்கும் வெளியிடப்படாது. மேலும், மேம்படுத்தப்பட்ட வன்பொருள் கொண்ட எதிர்கால போன்களில் மட்டுமே அவை வெளியிடும். 

ரியல்மி பேண்டிற்கு வரும் ஷெத், எதிர்காலத்தில் புதிய வாட்ச் முகங்களை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார். அழைப்பு அறிவிப்பு பிழைக்கான திருத்தம் செய்யப்பட்டுள்ளது, மேலும் பயனர்கள் தங்கள் சாதனங்களை கூகுள் பிளே ஸ்டோர் வழியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். குறிப்பிட்டுள்ளபடி, நிறுவனம் புளூடூத் ஸ்பீக்கர்களில் பணியாற்றி வருகிறது என்பதையும், மேலும் எதிர்காலத்தில் கூடுதல் தகவல்கள் பகிரப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Striking design
  • Decent selfie cameras
  • Good all-round performance
  • Solid battery life and quick charging
  • Bad
  • Preinstalled bloatware
  • Somewhat bulky
  • Cameras could do better in low light
 
KEY SPECS
Display 6.60-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 16-megapixel + 8-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 12-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4300mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Realme, Realme Band, Realme Smartwatch, Realme 6 Pro, Realme 6
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.