ரியல்மி நிறுவனம் தனது 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனான Realme XT-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த அறிமுக நிகழ்வில், ரியல்மியின் ஸ்மார்ட்போன் மட்டும் அறிமுகமாகவில்லை. அதனுடன் 10,000mAh அளவிலான ஒரு பேட்டரியும் அறிமுகமாகியுள்ளது. இந்த பவர் பேன்க் மட்டுமின்றி, ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்களும், இந்த நிகழ்வில் தன் அறிமுகத்தை பெற்றுள்ளது. ரியல்மியின் இந்த நெக்-பேண்ட் ஸ்டைல் வயர்லெஸ் ஹெட்போன்கள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி திறனை கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்போன்கள் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் 2 இயர்போன் போன்றே, இந்த இயர்போன்களும் மேக்னெடிக் கன்ட்ரோல் வசதியை கொண்டுள்ளது.
ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ் 1,799 ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இயர்போன்கள் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனையில் உள்ளது. இந்த இயர்போன்கள் கருப்பு (Black), பச்சை (Green), மற்றும் (Red) என்ற மூன்று வண்ணங்களில் விற்பனையில் உள்ளது.
அதே நேரம், அறிமுகமான மற்றொரு தயாரிப்பான ரியல்மி பவர் பேன்க் 1,299 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. இந்த பவர் பேன்க், ரியல்மி, பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஆகிய தளங்களில் விற்பனையில் உள்ளது. இந்த பவர் பேன்க் சாம்பல் (Grey), சிவப்பு (Red), மற்றும் மஞ்சள் (Yellow) என்ற மூன்று வண்ணங்களில் விற்பனையில் உள்ளது.
ரியல்மியின் இந்த இயர்போன்கள், 11.2mm பாஸ் பூஸ்ட் ட்ரைவர்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த ரியல்மி இயர்போன்களை ஓருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த இயர்போனின் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் திறன் மூலம், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் பேட்டரி 100 நிமிடங்கள் நீடிக்கும்.
ப்ளூடூத் v5.0 தொடர்பு வசதியை கொண்டுள்ள இந்த ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள், 10மீ தொலைவு வரையிலான தொடர்பு எல்லையை கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்போன்கள் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் 2 இயர்போன் போன்றே, இந்த இயர்போன்களும் மேக்னெடிக் கன்ட்ரோல் வசதியை கொண்டுள்ளது. இந்த இயர்போன்களுடன் ஒப்பிடுகையில் ஒன்பிளஸ் இயர்போன்களின் விலை மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
10,000mAh பேட்டரி அளவை கொண்ட இந்த ரியல்மி பவர் பேன்க், இரண்டு-வழி 18W குயிக் சார்ஜ் வசதியை கொண்டுள்ளது. USB டைப்-A மற்றும் USB டைப்-C என இரண்டு வகையான அவுட்புட் போர்ட்களை இந்த பவர் பேன்க் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்