ஸ்மார்ட்வாட்ச்சில் களமிரங்கிய பூமா...! விலை எவ்வளவுனு தெரியுமா...?

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 3 பிப்ரவரி 2020 11:43 IST
ஹைலைட்ஸ்
  • பூமா ஸ்மார்ட்வாட்சின் விலை ரூ.19,995-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • இது 1.19-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது
  • இந்த வாட்ச் கூகுள் பே வழியாக NFC பேமெண்டுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது

தடகள மற்றும் சாதாரண காலணி தயாரிப்பாளரான பூமா தனது முதல் ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பூமா ஸ்மார்ட்வாட்ச் என்று அழைக்கப்படும் இந்த தயாரிப்பு கடந்த ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெர்மன் பன்னாட்டு நிறுவனம் Fossil குழுமத்துடன் சேர்ந்து கடிகாரத்தை வடிவமைத்துள்ளது. இது ஸ்மார்ட்வாட்ச் விளையாட்டில் நீண்ட காலமாக உள்ளது. பூமா இந்தியாவுக்கு ஸ்மார்ட்வாட்ச்சைக் கொண்டு வருவது இதுவே முதல் முறையாகும்.


இந்தியாவில் பூமா ஸ்மார்ட்வாட்சின் விலை:

பூமா தனது முதல் அணியக்கூடிய சாதனத்தை பூமா ஸ்மார்ட்வாட்ச் என்ற பெயரில் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை ரூ. 19,995 ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியா முழுவதும் உள்ள பூமா கடைகளில் கிடைக்கும். நீங்கள் ஆன்லைனில் சாதனத்தை வாங்க விரும்பினால், பூமா ஸ்மார்ட்வாட்ச் பிளிப்கார்ட் மற்றும் பூமா.காமில் கிடைக்கும். பூமா ஸ்மார்ட்வாட்சில் 2 வருட உத்தரவாதத்தை பூமா வழங்குகிறது.


பூமா ஸ்மார்ட்வாட்சின் விவரக்குறிப்புகள்:

பூமா மற்றும் Fossil-லால் தயாரிக்கப்பட்ட, பூமா ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் Wear OS-ல் இயங்குகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 3100 Wear இயங்குதளத்தால் இயக்கப்படுகிறது. இது 390x390 பிக்சல்கள் தெளிவுதிறன் கொண்ட 1.19-இன்ச் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பூமா ஸ்மார்ட்வாட்சில் 512MB ரேம் மற்றும் 4 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

பூமா ஒரு அலுமினிய டயலைத் தேர்ந்தெடுத்து சிலிகான் பட்டையை வழங்குகிறது. பூமா ஸ்மார்ட்வாட்சின் இணைப்பு விருப்பங்களில் புளூடூத் 4.2 மற்றும் உள்ளமைக்கப்பட்ட ஜி.பி.எஸ் ஆகியவை அடங்கும். பூமா ஸ்மார்ட்வாட்ச் பின்புறத்தில் இதய துடிப்பு டிராக்கரைக் கொண்டுள்ளது.

பூமா ஸ்மார்ட்வாட்ச் பைலேட்ஸ், ரோயிங், ஸ்பின்னிங் மற்றும் வலிமை பயிற்சி உடற்பயிற்சிகளிலிருந்து count reps போன்ற செயல்பாடுகளை கூகுள் ஃபிட் (Google Fit) வழியாகவும் கண்காணிக்க முடியும். ஸ்மார்ட்வாட்ச் ஒர்க்அவுட் மோடில் செட் செய்தால், இது இதயத் துடிப்பையும் தொடர்ந்து கண்காணிக்கும்.

இது ஒரு Wear OS சாதனம் என்பதால், Google Assistant உள்ளமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்வாட்ச் swimproof-ஐக் கொண்டுள்ளது மற்றும் Google Pay வழியாக NFC பேமெண்டுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. பூமா ஸ்மார்ட்வாட்சில் உள்ள பேட்டரி திறன், 1 முதல் 2 நாட்கள் நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.  

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Puma Smartwatch, Puma, Fossil, Fossil Group, WearOS
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.