ஹானர் நிறுவனம் தனது தயாரிப்பான ஹானர் பேண்ட் 4 கருவியை அமேசானில் வரும் பிப்ரவரி 25ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.
ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் தனது விற்பனையை 25ஆம் தேதி மதியம் 12 மணிக்கு துவங்க உள்ளது. கடந்த மாதம் அறிமுகமான ஹானர் வீயூ20 ஸ்மார்ட்போன் மற்றும் ஹானர் வாட்ச் மேஜிக்குடன் அறிமுகமான இந்த ஹானர் பேண்ட் 4 பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகிறது.
மேலும் ரூபாய் 1,599க்கு இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட் வாட்ச் லாவா ரெட் மற்றும் பச்சை நிறங்களில் வெளியாகிறது. இந்த ஹானர் பேண்ட் 4 (ரன்னிங் எடிஷன்) ஸ்மார்ட்வாட்ச்சை கை மற்றும் கால்களில் கட்டிக்கொள்ள முடியும்.
இந்த அமைப்பை சில முன்னணி தடகள பயிற்சியாளர்கள் கால்களில் கட்டி பயன்படுத்துவது எளிதாக இருக்கும் என தெரிவித்த அறிவுரைக்கு பின்னர், தயாரிப்புக்கு அறிமுகமானது. மேலும் நடந்த சோதணையில் கால்களில் கட்டிக்கொண்டு ஓடுவது இன்னும் எளிமையாக இருக்கும் என கண்டறியப்பட்டது.
இந்த ஹானர் பேண்ட் 4 0.5 இஞ்ச் ஓலெட் திரை மற்றும் 77mAh பேட்டரியுடன் வெளியாகுகிறது. 5ஏடிஎம் வாட்டர் பூரூஃப் மற்றும் அனைத்து விதமான நோட்டிபிகேஷன் வசதிகளுடன் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்