'1மோர்' ஹெட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்...விலை பற்றிய தகவல்கள்!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 30 ஜனவரி 2019 18:44 IST
ஹைலைட்ஸ்
  • ரூ.4,499 க்கு முன்பதிவு துவங்கிவுள்ளது.
  • காதுகளில் மிக கச்சிதமாக பொருந்தும் ஹெட்போன்ஸ்
  • 6 மணி நேரம் வரை பேட்டரி வசதி இருக்கும் என எதிர்பார்பு

1மோர் ஹெட்போன்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கிவுள்ளது.

ஹெட்ஃபோன் தயாரிப்பாளரான 1மோர், தனது சமீபத்திய உற்பத்தியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 1மோரின் இந்த டூயல் டைனாமிக் டிரைவர் புளூடூத் ஹெட்போன்ஸ், காதுகளில் மிகவும் கச்சிதமாக பொருந்தும் தன்மையை கொண்டது.

நெக்பேண்ட்,பேட்டரி மற்றும் கன்டிரோல்கள் பயனிட்டாளருக்கு அருகாமையில் பொருத்தப்பட்டிருக்கும். தற்போது முன்பதிவு மட்டும் ரூ.4,499 க்கு தொடங்கியுள்ள நிலையில்,இந்த ஸ்டைலீஷ் புளூடூத் ஹெட்ஃபோன் ரூ.7,499க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

முன்பதிவுகளை 1மோர் இந்தியாவின் வலைதளத்திலோ அல்லது ஆன்லையின் போர்டல் ஹெட்போன்ஜோனிலோ பெறலாம். கிராமி விருது ஒலி பொறியாளரான லூகா பிக்னார்டியுடன் இணைந்து இந்த ஹெட்செட்டின் ஆடியோ டியுனிங்கை செய்திருப்பதால், தரமான ஹெட்செட்டாக இருக்கும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

தனது பெயரைப்போல் டூயல் டைனாமிக்காக இந்த ஹெட்போன்ஸ் நெக்பேண்டாகவும், இயர்போன்களின் பரிமானவாகவும் திகழ்கிறது. ‘ஐயிஸ் ஆப் மீட்நைட்' (கருப்பு) மற்றும் ‘சிட்டி ஆப் ரோசஸ்' (ரோஸ்) என இரண்டு நிறங்களில் வெளியாகவுள்ளது. முன்பதிவுகள் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்குகின்ற நிலையில் குறைந்தபட்ச விலையுடன் கூடிய முன்பதிவு வரும் பிப்ரவரி 5 வரை வாங்க முடியும்.

வேகமாக சார்ஜ் செய்யும் சக்தியுடன் 3 மணி நேரம் வரை சார்ஜபிள் பேட்டரியின் ஆயுள் என பல அம்சங்களை இந்த புதிய 1மோர்ஹெட்போன் கொண்டுள்ளது. 1,000 ரூபாய்கும் குறைவான ஹெட்போன்களின் வகைகளில் தனக்கென நல்ல இடத்தை பெற்ற பிஸ்டன் பிட், 1 மோர் நிறுவனத்தை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: 1More, Headphones, Bluetooth
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.