புதுடில்லி: உலகின் முக்கிய 5 நாடுகளில் ஏரியல் டேக்ஸி சேவையை உபர் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்சு, பிரேசில் ஆகிய ஐந்து நாடுகளில் இந்த சேவை அறிமுகமாக உள்ளது. ‘உபர் எலிவேட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், ஏர் டாக்ஸி மூலம் நகரத்திற்குள் பயணிக்கலாம்
“மும்பை, டில்லி, பெங்களூரு போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில், சில கிலோமீட்டர் தூரம் பயணிக்கவே ஒரு மணி நேரம் ஆகிறது. எனவே, உபர் எலிவேட் திட்டத்தின் மூலம், மக்களின் பயண நேரத்தை குறைக்கலாம்” என்று உபர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், மொபைல் போன் ஆப் மூலம் விமானத்தை வாடகைக்கு எடுக்கும் வசதி இந்தியாவிற்கு வர உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்