Photo Credit: Twitter/ Aviation Photo
மென்பொருள் கோளாறு காரணமாக பாதுகாப்பு எச்சரிக்கை வேலை செய்யாததால், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள், தரையில் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னதாக அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் லயன் ஏர் மற்றும் எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் விபத்தை சந்தித்து 351 இறந்து போனதற்கும் இந்த தொழில்நுட்ப கோளாறுதான் காரணம். எனவே, இந்த போயிங் விமானங்கள், வாசிங்டனில் உள்ள போயிங்கின் ரென்டன் மையத்தில் நிறுத்தப்பட்டது. இந்த விமானங்களை நிறுத்துமிடம் முழுமையடைந்ததால், அந்த நிறுவனம் தன் ஊழியர்களின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சில விமானங்களை நிறுத்தியுள்ளது. இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏவியேசன் போட்டோ (Aviation Photo) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்து, 'விமான போக்குவரத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு' என்று கூறியுள்ளது. இந்த புகைப்படம், விமானம் நிறுத்துமிடத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக பல விமானங்கள் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும், இந்த விமான நிறுத்தும் மையத்தின் வான்வெளி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வாசிகள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இப்படி விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதன் முழு வான்வெளி காணொளி ஒன்றையும் சீட்டில் கிங் 5 வெளியிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் குறிப்பிடுகையில், மொத்தமாக 500 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இந்த கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 100 விமானங்கள், வாசிங்டனில் உள்ள இந்த ரென்டன் மையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த விமானத்தின் சேவைகளை போயிங் நிறுவனம் ரத்து செய்துள்ளதால், 1.4 பில்லியன் டாலர்கள் பயணச்சீட்டு செலவை இந்த நிறூவனம் சந்தித்துள்ளது. மேலும், இந்த விமானம் தரையில் இருக்கும் காலங்களில், மாத பராமரிப்பிற்காக ஒவ்வொரு விமாத்திற்கும் 2,000 டாலர்கள் செலவாகும். இந்த விமானங்கள் செப்டம்பர் மாதம் வரை எந்த ஒரு சேவையிலும் ஈடுபடுத்தப்படாமல், பராமரிப்பிற்காக நிறுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்