வோடபோன் நிறுவனம் தனது பிரபல ரீச்சார்ஜ் ஸ்கீமான ரூ.509 திட்டத்தை (தினசரி 1.5ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு) மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தினசரி டேட்டா பயன்பாடுடன் வரம்பற்ற கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பும் வசதியைப் பெறலாம்.
மேலும் இந்தத் திட்டத்துடன் வோடபோன் ப்ளே ஆஃப் (லைவ் டிவி மற்றும் படங்களை பார்க்க முடியும்) பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்னர் 1.4 ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த புதிய திட்டம் நல்ல வரவேற்பைப் பொரும் என எதிர்பார்கப்படுகிறது. இந்த ரூ.509-க்கான திட்டம், வோடபோனின் ரூ.529-க்கான திட்டம் தருகின்ற அதே ஆஃபர்களை தருகிறது.
வோடபோன் 509 ரூபாய்கான திட்டத்தின் பயன்கள்;
1.5 ஜிபி தினசரி டேட்டா, இந்தியாவுக்குள் வரம்பற்ற எஸ்டீடி மற்றும் லோக்கல் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை இந்தத் திட்டதின் மூலம் 90 நாட்களுக்குப் பெற முடிகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல வோடபோன் ப்ளேவையும் இந்தத் திட்டதின் மூலம் பயன்படுத்த முடியும்.
சென்னை, அசாம், டெல்லி மற்றும் என்சிஆர், குஜராத், ஹரியானா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் பேன்ற நகரங்களில் இந்தத் திட்டம் முதற்கட்டமாக அறிமுகமாகியுள்ளன. மேலும் ஏற்கெனவே இருக்கும் 539 ரூபாய் திட்டம் மற்றும் 509 ரூகாய்கான திட்டத்தில் 29 ரூபாய் சேமித்து அதே வசதிகளைப் பெறலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்