Photo Credit: Reliance Jio
கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான அறிவிப்பின்படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் சாம்சங் நிறுவனம் இணைந்து கேலக்ஸி எம் 10 மற்றும் எம் 20 போன்களுக்கான ஸ்பெஷல் சேலை நடத்த முடிவு செய்துள்ளனர். இன்று (22, பிப்ரவரி) இந்த சேல் நடக்கிறது. மேலும் இந்த சேல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. சாம்சங் கேலக்ஸி எம் 10 அல்லது 20 போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரட்டிப்பு டேட்டா பிளான் கிடைக்கும்.
இந்த ஸ்பெஷல் சேல் இன்று மதியம் 12 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்குள் நடக்கும். மேலும் இந்த ஸ்பெஷல் தள்ளுபடி போனை ஜியோ ஆப் அல்லது ஜியோ.காம் தளங்களில் வாங்க முடியும். பயன்பாட்டாளர்கள் விபரத்தை சரிபார்ப்பு செய்த பிறகு கேலக்ஸி எம் வகை போன்களை வாங்க முடியும்.
கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூபாய்.12,990(4ஜிபி+64ஜிபி)க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே மாடலில் (3ஜிபி+32ஜிபி) வகை மாடல் ரூபாய் 10,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங்கின் எம்10 பொறுத்தவரை (3ஜிபி+32ஜிபி) வகை மாடல் ரூபாய் 8,990-க்கும், (2ஜிபி+16ஜிபி) மாடல் ரூபாய் 7,990-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த சேலின் போது விலையில் மாற்றம் ஏதுமில்லை.
மேலும் சாம்சங் சார்பில் நடத்தப்படும் அடுத்த ஃபிளாஷ் சேல் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நடக்கவுள்ளது.
ஜியோ நிறுவனம் தரும் இந்த ஆஃபர் பெருவதற்கு கேலக்ஸி எம் வகை போன் உரிமையாளர் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 198 அல்லது ரூபாய் 299 க்கு ரீச்சார்ஜ் செய்துகொண்டு டபுள் ஆஃபராக மே மாதம் வரை பயன்படுத்த முடியும்.
மேலும் அண்டிராய்டு 8.1 ஓரியோ வில் இயங்கும் சாம்சங் எம்10 ஸ்மார்ட்போன் 6.2 இஞ்ச் அளவு ஸ்கிரீன் உடையது. இரண்டு கேமராக்களுடன் வெளியான இந்த ஸ்மார்ட்போன் 160 கிராம் எடை மற்றும் 3,400 mAh பேட்டரி பவரை கொண்டுள்ளது.
அதுபோல் சாம்சங் கேலக்ஸி எம்20 அண்டிராய்டு 8.1 ஓரியோவில் இயங்குகிறது. மேலும் 6.3 இஞ்ச் உயரமுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3 மற்றும் 4 ஜிபி ரேம் வசதிகளுடன் வெளியானது. 32 மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ கார்டு வசதியுடன் 5,0000mAh பேட்டரி பவருடன் விற்பனையில் கலக்கி வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்