இந்தியாவில் ஜியோ நிறுவனம் தனது இரண்டாம் ஆண்டு விழாவை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது தான் ஜியோ நிறுவனம். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் இந்தியாவில் 4ஜி சேவையில் முற்றிலும் இல்லாத பல சாதனைகளைப் படைத்துவிட்டது ஜியோ. ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஜியோ வாடிக்கையாளர்கள் 240 கோடி ஜிபி 4ஜி இன்டெர்நெட் சேவையைப் பயன்படுத்துகிறார்களாம். கடந்த ஜூன் 30-ம் தேதியின் அடிப்படையின் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 215 மில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2ஜிபி 4ஜி டேட்டா கூடுதலாக வழங்க உள்ளது ஜியோ. இதன் அடிப்படையில் செப்டம்பர் 11-ம் தேதி வரையில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 4ஜி டேட்டா 2ஜிபி கூடுதாலாக வழங்கப்பட உள்ளது. மொத்தமாக 10ஜிபி கூடுதல் டேட்டா இலவசம். இத்திட்டம் இன்று செப்டமர் 7 முதல் செப்டமபர் 11-ம் தேதி வரையில் மட்டுமே. வாடிக்கையாளர்கள் ‘மை ஜியோ’ ஆப் மூலமாக இச்சலுகையை அறிந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்