Photo Credit: Reliance
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Reliance Jioவின் 8th Anniversary ஆஃபர் பற்றி தான்.
ஜியோ நிறுவனம் தனது 8 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. ஒட்டுமொத்த கஸ்டமர்களும் கலங்கும்படியான ஆஃபரை ஜியோ கொடுத்துள்ளது. இலவச டேட்டா முதல் ஓடிடி வரையில் சலுகைகளை வாரிவழங்கி இருக்கிறது. மூன்று திட்டங்களில் இந்த சலுகை கிடைக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். ரூ.899, ரூ.999 மற்றும் ரூ.3599 ஆகிய திட்டங்களில் சலுகைகள் கிடைக்கிறது. இதில் 365 நாட்களுக்கு தினசரி 2.5ஜிபி டேட்டா உபயோகத்தை உள்ளடக்கிய ரூ3,599 வருடாந்திர திட்டமும் அடங்கும்.
புது திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அந்த திட்டத்தின் சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக ரூ.175 மதிப்பில் 10 OTT Apps Subscription மற்றும் 10 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக Zomato Gold Membership கிடைக்கிறது. இதை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், ரூ.500 மதிப்பிலான AJIO Voucher கிடைக்கிறது. ரூ.2999-க்கு மேல் ஆர்டர் செய்யும்போது, இந்த வவுச்சரை பயன்படுத்தி கொள்ளலாம். மேற்கூறிய 3 திட்டங்களில் எந்தெந்த ஓடிடிகளை எதிர்பார்க்கலாம். இந்த இலவச சந்தாவில் Sony LIV, ZEE5, JioCinema Premium மற்றும் Lionsgate Play கிடைக்கிறது. இது கூடவே Discovery+, SunNxt, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi வசதிகளும் கிடைக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. கூடுதலாக 20 ஜிபி டேட்டா கிடைக்கிறது. Unlimited Voice Calls, 100 SMS, Unlimited 5G Data சலுகை கிடைக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 98 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது.
இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த சலுகைகள் எல்லாம் 8வது ஆண்டு விழா சலுகையாக கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்குள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்