ஜியோவின் 'ஒர்க் ப்ரம் ஹோம்' ஆட்-ஆன் டேட்டா பேக்கில் மாற்றம்!

ஜியோவின் 'ஒர்க் ப்ரம் ஹோம்' ஆட்-ஆன் டேட்டா பேக்கில் மாற்றம்!

ஜியோ கடந்த வாரம் தனது "ஒர்க் ஃப்ரம் ஹோம்" ஆட்-ஆன் பேக்குகளை அறிமுகப்படுத்தியது

ஹைலைட்ஸ்
  • ஜியோவின் ஆட்-ஆன் பேக்கில் 50 ஜிபி வரை டேட்டாவைப் பெறுங்கள்
  • ஆட்-ஆன் பேக்கில் 3 புதிய ப்ளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டன
  • ஜியோ, ரூ.2,399 ரீசார்ஜ் ப்ளானையும் அறிமுகப்படுத்தியுள்ளது
விளம்பரம்

Jio சமீபத்தில் தனது புதிய 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பேக்கின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த வேலிடிட்டி மாற்றம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று ஜியோ ஆட்-ஆன் பேக்குகளுக்கும் பொருந்தும், இதில் ரூ.251, ரூ.201 மற்றும் ரூ.151 ரீசார்ஜ்கள் அடங்கும். இந்த கூடுதல் பேக்குகளில், பயனர்கள் 50 ஜிபி வரை அதிவேக தரவைப் பெறுவார்கள்.

30 நாள் வேலிடிட்டியுடன் ரூ.251, ரூ.201 மற்றும் ரூ.151 ஒர்க் ஃபரம் ஹோம் ப்ரீபெய்ட் ஆட்-ஆன் பேக்குகள் ரிலையன்ஸ் ஜியோ தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

 
ஆட்-ஆன் பேக்கின் பலன்கள்:

பேக்கின் மதிப்பை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. நீங்கள் இன்னும் 50 ஜிபி அதிவேக டேட்டாவை ரூ.251 ஆட்-ஆன் பேக்கில் பெறுவீர்கள். ரூ.201 பேக்கில், 40 ஜிபி அதிவேக டேட்டாவும், ரூ.151 பேக்கில் 30 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.

ஜியோ சமீபத்தில் ரூ.2,399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை அறிமுகப்படுத்தியது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மேலும், 2 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவுடன் அன்லிமிடெட் ஜியோ-டூ-ஜியோ அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் செய்திகளை வழங்குகிறது.


In 2020, will WhatsApp get the killer feature that every Indian is waiting for? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »