ஜியோ தனது ரூ.4,999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளானை மீண்டும் கொண்டுவந்துள்ளது. இது அதன் நீண்ட கால ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களில் ஒன்றாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. இந்த ப்ளான், 350 ஜிபி டேட்டா மற்றும் 360 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. நீங்கள் அன்லிமிடெட் ஜியோ-டூ-ஜியோ அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ்-ஐ பெறலாம். ஜியோ ப்ளான், ஜியோ-டூ-ஜியோ அல்லாத போன்களுக்கு 12,000 நிமிட அழைப்புடன் வருகிறது.
ரூ.4,999 ஜியோ ப்ளானை ஜியோ வலைத்தளத்தின் (Jio website) நீண்ட கால பேக் பிரிவில் காணலாம். மற்ற எல்லா ப்ளான்களையும் போலவே, இது ஜியோ செயலிகளுக்கான சந்தாவுடன் வருகிறது. 350 ஜிபி அதிவேக டேட்டாக்களுக்கு பிறகு, பிரெளசிங் வேகம் 64 கே.பி.பி.எஸ் ஆக குறையும். இந்த புதிய ப்ளானின் இருப்பை முதன்முதலில் ட்ரீம்.டி.டி.எச் கண்டறிந்தது, இது சனிக்கிழமை ஜியோ தளத்தில் கிடைத்தது என்று கூறுகிறது.
மற்ற நீண்ட கால ப்ளான்களில், ஜியோ பயனர்களுக்கான ரூ.1,299 ப்ளான், 336 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் 24 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு வேகம் 64 கேபிபிஎஸ் வரை குறைகிறது. இது ஆரம்பத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் வகையில் வழங்கப்பட்டது, பின்னர் அது கடந்த மாதம் 336 நாட்களாக குறைக்கப்பட்டது. மறுபுறம், ரூ.2,121 ப்ளான் 336 நாட்களுக்கு வேலிடிட்டியாகும், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டாவுடன் வருகிறது. 1.5 ஜிபி தாண்டிய பிறகு இது 64 கே.பி.பி.எஸ் வரை குறைகிறது. நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அனுப்பலாம். முந்தையது கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் டிசம்பரில் “2020 புத்தாண்டு சலுகையின்” ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட பழைய ரூ.2,020 ப்ரீபெய்ட் ப்ளான் பழையதை மாற்றியது.
நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து ரூ.4,999 ப்ளானை வாங்கலாம் மற்றும் பணம் செலுத்துதல் Paytm, PhonePe, Mobikwik, அத்துடன் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் / ஏடிஎம் கார்டு போன்ற பிற கட்டண முறைகள் மூலமாகவும் பணம் செலுத்தலாம். இந்த ரீசார்ஜ், MyJio செயலி மற்றும் பிற மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் வழங்குநர்கள் வழியாகவும் கிடைக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்