Photo Credit: Jio.com
ஜியோ போன் பயனர்களுக்காக இரண்டு புதிய குறுகிய வேலிடிட்டி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ப்ளான்களை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ப்ரீபெய்ட் ப்ளான்களின் விலை ரூ.49 மற்றும் ரூ.69 ஆகும். அவை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த புதிய ப்ரீபெய்ட் ப்ளான்கள், குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா பலன்களை வழங்குகின்றன. இந்த பேக், ஜியோ போன் பயனர்களுக்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், மேலும் இந்த குறுகிய வேலிடிட்டி ப்ளான்களுக்கு ஜியோ போனுடன் ஜியோ சிம் பயன்படுத்தப்பட வேண்டும்.
புதிய ரூ.69 ஜியோ போன் ப்ளான், ஒரு நாளைக்கு 0.5 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. உச்சவரம்பை அடைந்த பிறகு, டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது. புதிய ப்ளான், ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் குரல் அழைப்புகளையும், ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுக்கு 250 நிமிடமும், 25 எஸ்எம்எஸ் செய்திகளையும் மற்றும் அனைத்து ஜியோ செயலிகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. ரூ.69 ப்ளானின் வேலிடிட்டி வெறும் 14 நாட்களே ஆகும்.
மறுபுறம், ரூ.49 ஜியோ போன் ப்ளான், வெறும் 2 ஜிபி டேட்டா, ஜியோ டூ ஜியோ அன்லிமிடெட் அழைப்புகள், ஜியோ அல்லாத குரல் அழைப்புகளுக்கு 250 நிமிடங்கள், 25 எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் 14 நாட்கள் வேலிடிட்டிக்கான அனைத்து ஜியோ சந்தா சேவைகளுக்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த ப்ளான்களை முதலில் டெலிகாம் டாக் கண்டறிந்தது.
அதே ரூ.49 குறுகிய வேலிடிட்டி ப்ளான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது, ஆனால் பின்னர் அது நிறுத்தப்பட்டது. இந்த ப்ளான் இப்போது பாதி வேலிடிட்டியாகும், ஆனால் அதிக டேட்டா பலன்களுடன் மீண்டும் வந்துள்ளது. இந்த ப்ளான் ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 பயனர்களுக்கு வேலை செய்ய வேண்டும். இதை நிறுவனத்தின் வலைத்தளம் வழியாகவோ, உங்கள் ஜியோ போனில் உள்ள MyJio செயலி மூலமாகவோ அல்லது பிரபலமான மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் போர்ட்டல்கள் மூலமாகவோ ரீசார்ஜ் செய்யலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்