உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸால், நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பால், காய்கனி மற்றும் மருந்து கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள், கடைகள் அல்லது விற்பனை நிலையங்களை நம்பியிருப்பவர்கள் ரீசார்ஜ் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே, ஏடிஎம் இயந்திரம் வழியாக மொபைலை ரீசார்ஜ் செய்யும் திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்ய, ஏடிஎம் கார்டை கையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, ரீசார்ஜ் செய்வதற்கு OTP செயல்முறை எதுவும் இல்லை.
ஜியோ வாடிக்கையாளர்கள், தங்கள் பொபைல் எண்ணை, ஏயூஎஃப் வங்கி, ஆக்சிஸ் வங்கி, டிசிபி வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.டி.பி.ஐ வங்கி, ஐ.டி.எஃப்.சி வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, மேற்கூறிய வங்கிகளுக்கு இடையில் 1,00,000-க்கும் மேற்பட்ட ஆன்-சைட் மற்றும் ஆஃப்-சைட் ஏடிஎம்கள் உள்ளன.
மொபைல் பேங்கின் கிடைக்காத ஃபீசர் போன் பயனர்களுக்கும், ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யும் ப்ளான்களுக்கு பணம் செலுத்துவதற்கும் இந்த அம்சம் மிகவும் உதவியாக இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்