கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பாக ‘ஜியோ புத்தாண்டு தள்ளுபடி' விற்பனையை தொடங்கியது. மேலும் இந்த அறிவிப்பின் படி ஜியோ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 399 ரிசார்ஜுடன் 100 சதவீதம் தள்ளுபடி அளிக்கவுள்ளது.
இந்த புதிய சலுகை வரும் ஜனவரி 31, 2019 வரை பெற முடியும். மேலும் இந்த சலுகைகளை ஏற்கனவே உள்ள ஏஜியோ சலுகைகளுடன் பயன்படுத்திக்கொள்ள மூடியும். இதன்மூலம் 2 ஜிபி கூடுதல் டேட்டாவை வாடிகையாளர்களால் பெற முடியும். இது புதிய மற்றும் பழைய ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
மை கூப்பன் பிரிவில் வரும் இந்த கேஷ் பேக் தள்ளுபடி ஏஜியோ ஆப்பில் 1000 ரூபாய்க்கு மேல் துணிகள் வாங்கினால் அந்த தள்ளுபடியை பயன்படுத்த முடியும். ஏஜியோவின் இந்த தள்ளுபடி கூப்பன்கள் மார்ச் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்